Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா, செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகதி முகாம்களை பார்வையிட இலங்கைத் தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று வவுனியா முகாம்களை பார்வையிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் வந்த தமிழ் எம்.பிக்கள் அனைவரும் ராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தன் தொலைபேசி மூலம் மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் முறையிட்ட பின்னரும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வவுனியா முகாம்களை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com