Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல்லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள்.

வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல்லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது அவலங்களை அந்தப் பகுதி மக்கள் எடுத்துரைத் திருக்கின்றனர். நேற்றுக் காலையில் வவுனியாவில் இருந்து புறப்பட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் மதியா மடு, நெடுங்கேணி பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைப் பார்வையிட்ட பின்னர் அங்கிருந்து ஒலுமடு, ஒட்டுசுட்டான், வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு, தண்ணீரூற்று ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர்.

ஆவலோடு வரவேற்று குறைகளை எடுத்துக் கூறினர். வன்னியின் பல்வேறு இடங்களிலும் மீள்குடியேறிய மக்களை கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பு எம்.பிக்களை மிகுந்த ஆவலோடு வரவேற்று உபசரித்த மக்கள், தங்கள் குறைகளை எம்.பிக்களுக்கு எடுத்துக் கூறினர்.

சொந்த இடங்களில் குடியேறிவிட்டோம் என்ற திருப்தி மக்களுக்கு இருந்தாலும், எதுவுமே மீதம் இல்லாத வெறுமையுடன்தான் அவர்கள் இருக்கிறார்கள். தடுப்புக்காவலில் உள்ள தங்களது பிள்ளைகளை விடுவித்துத் தரவேண்டும் என்று அவர்கள் மன்றாடுகிறார்கள். கணவனை இழந்த விதவைகளும், பிள்ளைகளை இழந்த பெற்றோருமாக உதவி செய்வதற்கே யாரும் இன்றி அவதிப்படுகிறார்கள்.

அநாதைகள் போல் இருக்கிறார்கள். வீடுகள் எல்லாம் இடிந்துவிட்டன. குடியேற்றப்பட்டவர்களுக்கு தறப்பாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிலருக்கு அதுகூட இல்லை. மற்றவர்களின் தறப்பாள்களுக்குக் கீழே அநாதைகள் போல் இருக்கிறார்கள். தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. மின்சார வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ அறவே கிடையாது.

நாங்கள் போகும் வழியெங்கும் இடிந்த வீடுகளையும் பாழடைந்து கிடக்கும் கட்டடங்களையும்தான் கண்டோம். வற்றாப்பளை கிராமத்தில் ஆக 32 வீடுகள்தான் மிஞ்சியிருக்கின்றன. ஏனைய வீடுகள் எல்லாமே அழிந்துவிட்டன. 6 மாதங்களுக்குத்தான் நிவாரணம். அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த மக்கள் கவலையுடன் இருக்கிறார்கள்.

சிலருக்கு இன்னமும் ஒருமாத நிவாரணம் கூடக் கிடைக்கவில்லை. விரைவாகத் தங்களுக்கு வீடுகளைக் கட்டித்தந்து அடிப்படை வசதிகளையும் செய்து தரும்படி அந்த மக்கள் கேட்கிறார்கள்.

எந்த இடத்துக்குப் போனாலும், உறவுகளை நினைத்துத்தான் அவர்கள் வேதனைப்படுகிறார்கள். யுத்தத்தின் கோரமுகத்தை முல்லைத்தீவில் கண்டோம்'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவா் தெரிவித்தார்.


0 Responses to யுத்தத்தின் கோரமுகத்தை முல்லைத்தீவில் கண்டோம்: நாடாளுமன்ற உறுப்பினர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com