
"த பினான்சியல் டைம்ஸ்" என்ற இணையத்தளத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தில் இரு தரப்பும் மேற்கொண்ட போர் முறை குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதன் காயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை முன்வைப்பதன் மூலம் அதனை முடிபுக்குக் கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் எத்தனை ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை மறைத்து அரசாங்கத்தினால் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முடியுமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் இலங்கை அர சாங்கத்தினால் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 Responses to அரசாங்கத்தினால் சமாதானத்தை வெற்றி கொள்ள முடியுமா? ஹிலாரி கிளின்டன்