Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடு கடந்த அரச அவையின் தற்போதைய பதவிக் காலத்திற்கான சபாநாயகராக கனடாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 25 பிரதிநிதிகளில் ஒருவரான திரு. பொன் பாலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற தேர்தலில் மார்க்கம் பகுதிக்கான வேட்பாளராகப் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட திரு. பொன் பாலராஜன் அவர்கள் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பதோடு தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராது குரல் கொடுத்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நாடுகடந்த அரச பிரதிநிதிகளின் அமர்விலேயே இந் நிகழ்வு இடம்பெற்றது. நாடு கடந்த அரசின் அவை உறுப்பினர்களான திரு ஈசன் குலசேகரம் பொன். பாலராஜனை முன்மொழிய பிரிதொரு உறுப்பினராக திருமதி சோதிநாதன் ஜெயமதி வழிமொழிந்தார்.

கனடியத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட பல அமைப்புக்களில் காத்திரமான பங்கு வகிக்கும் திரு.பொன் பாலராஜன் கனடிய தேசிய நீரோட்ட அரசியலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவர் என்பதோடு இளையோர், பட்டதாரிகள் விவகாரங்களில் முழுக் கவனம் செலுத்தும் ஒரு நல்நோக்கர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

கடந்த ஆண்டு வன்னி அவலத்தின் போது பொது அமைப்புக்களை இணைத்துச் செயற்படுவதில் அக்கறையாகச் செயலாற்றிய திரு. பொன் பாலராஜன் சர்வதேச தன்னார்வ அமைப்புக்களுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திச் செயலாற்றி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாடு கடந்த அரச அவையின் சபாநாயகராக திரு. பொன். பாலராஜன் தெரிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com