முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின்றன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சுமார் 10,000 பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்த பட்டியலில் அரசியல், மற்றும் இராணுவப் பிரிவை சேர்ந்த முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
போரின் பின் சிறீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த புதுவை இரத்தினதுரை, பாலகுமாரன், யோகரத்தினம் யோகி, போன்றோர் கொல்லப்பட்டுள்ளதாக ஊகங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.
அதை உறுதி செய்வது போல், இவ்வாறு பட்டியலில் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

0 Responses to பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை: கோட்டபாய