அருமைத் தமிழ் நெஞ்சங்களே!
நம்மில் பலர் தாங்கமுடியாத துயரத்துடன், அவமானத்தையும்,வேதனையையும் எப்படி வெளிக்காட்டுவதென்று தெரியாமல் பொங்கிக் கொண்டிருக்கின்றோம். வேதனையின் வடி கால் இரண்டு தான். ஒன்று பேச்சு, மற்றொன்று செயல்.
வெறும் பேச்சும் வெட்டிப் பேச்சும் சில மணித்துளிகளுக்குச் சரிப்படும், பேண்ட் எய்ட் (Band aid ) போல. ஆக்க பூர்வமானப் பேச்சு ஆக்க பூர்வமான செயலுக்கு அடி கோலும். நாம் அதில் ஓரளவு வெற்றி கண்டு வருகின்றோம். நல்ல இடத்து நண்பர்கள் மூலம் ஆக்கப் பூர்வமானச் செயல் பாடுகள் நடக்கின்றன.
இவை பற்றி நன்கு அறிந்து கொள்வதே நமது பேச்சாகட்டும். அதன் மூலம் நடக்க வேண்டியவற்றை நடத்திக் காட்டுவதே நமது செயலாகட்டும். மறந்து விட வேண்டாம். நாடிழந்து, மொழியிழந்து, 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டும் யூதர்கள் வெகு விரைவிலே மலையுச்சியை ஏறி நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.
"என்னால் என்ன செய்ய முடியும்? " என்பவர்களால் ஒன்றும் செய்ய முடியாது ! "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டு முன் வாருங்கள்..
மனச் சோர்வடைந்து உண்டு, உறங்கி வாழ்வது வாழ்வா? உடன் பிறப்புக்கள் நம்மை நம்பியிருக்கின்றார்கள். அவர்களைக் கட்டாயம் பார்க்கத் தான் போகிறோம். அப்போது எந்த முகத்துடன் பார்க்கப் பொகின்றோம் என்பதை இன்று தீர்மானிப்போம் !
அன்புக்குரிய நண்பர்களே!
ஆம், நாம் இனிமேலும் பேசியோ, எழுதியோ எமது காலத்தை வீணடிக்க முடியாது. நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தமிழீழத்தில் வீடு வாசல்களை இழந்து இன்னமும் அகதிகளாக வாழுகின்ற எமது உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டி அவர்களைத் தூக்கி விடுவோம்.
இன்று அனாதைகளாகப் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிக்கும் எமது சிறார்களுக்குப் பாதுகாப்பும், உணவும், உடையும், உறைவிடமும் அமைத்துக் கொடுப்போம்.
உலகத் தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படும் "Humanitarian assistance, Sponsorship of Orphans and Destitute families" பணியில் நாமும் இணைந்து செயற்படுவோம், வாருங்கள்.
mte.france@gmail.com

0 Responses to நாம் இனிமேலும் பேசியோ, எழுதியோ எமது காலத்தை வீணடிக்க முடியாது: மக்கள் பேரவை