Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!

சிங்களவனின் தமிழின அழிப்பின் குரூரமான அதியுச்ச படுகொலையினை மிகப்பெரும் சர்வதேச ஊடகம் சனல் 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்ந்துள்ளது.

அப்பாவி மக்களை விடுதலைப் புலிகள் எனக்கூறி கொடுமையான சித்திரவதைகளை மேற்கொண்டு அதனை படம்பிடித்து மகிழ்ந்த மகிந்தா அரசினையும், தனது இராணுவம் மனிதநேயமும், மானிட தர்மம் கொண்டது என்று வாய்மொழிந்த முன்னாள் இராணுவ தளபதி சரத்பென்சேகாவையும் தலைகுனிய வைத்துள்ளது.

இன்று சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்பும், சர்வதேச போர் குற்றங்களுக்கான அமைப்புக்களும், விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிக்கையை விட்டுள்ளஅதே நேரத்தில், பெரும் நெருக்கடிகளையும், உயிர் இழப்புக்களையும் தாங்கி உண்மையை உலகிற்கு கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில் அதற்கு உறுதுணையாய் நிற்காமல்? புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நாங்கள் இன்னும் எதுநடக்க வேண்டும்? என்று எதிர்பார்க்கின்றோம்?

இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களை குறைந்த பட்சம் சர்வதேச நீதிக்கூண்டில் விரைவில் ஏற்றுவதற்கு நாம் வாரத்தில் 3மணி நேரம் மட்டும் இறந்து போன, இன்னும் சித்திரவதைகளுக்குள் சிக்குண்டு போயுள்ள எமது உறவுகளுக்கு குரல்கொடுக்க வேண்டாமா?

ஒன்றுகூடுவோம்

காலம்.

26.05.2010 புதன்கிழமை பி.பகல் 15.00மணி முதல் 18.00 மணிவரை

பிரெஞ்சு பாராளமன்றம் (Assemblée Nationale) முன்பாக.

(Metro) : Assemblée Nationale ligne 12,Invalides ligne8 et13

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு

Tel: 01 43 58 11 42

0 Responses to பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!: ஒன்றுகூடுவோம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com