மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளரான ஆரையம்பதி 3ம் குறிச்சியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று குழந்தைகளுக்கு தந்தையான திரு கார்த்திக்கேசு பிரபாகரன் என்பவரே தாக்குதலுக்கு உள்ளான நபராவார்.
கடந்த வாரம் குறித்த நபர் மட்டக்களப்பில் இருந்து மாலை 7.00 மணியளவில் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது ஆரையம்பதியில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இயங்குகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) இயக்கத்தைச் சேர்ந்த மூன்று பேர் தன்னை கடுமையாக தாக்கி விட்டு தான் இறந்து விட்டதாக எண்ணி வீதியோரத்தில் விட்டுச் சென்றதாகவும் பின்பு பக்கத்து வீட்டில் இருந்தவர்களின் உதவியுடன் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததாகவும் சொன்னார். தனது ஒரு கை முறிந்து விட்டதாகவும் பொலிஸில் இது சம்பந்தமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான இவர் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளராக போட்டியிட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) செயலாளர் நாயகம் திரு பிரசன்னா இந்திரகுமார் அவர்களின் ஆதரவாளரும் தேர்தல் பரப்புரைகளின்போது இவருக்காக முன்னின்று செயற்பட்டவரும் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக திரு பிரசன்னா இந்திரகுமார் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது மேற்படி சம்பவத்தை அவர் உறுதிசெய்ததோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)அமைப்பினர் இவ்வாறு பொதுமக்களை தாக்குவதானது தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதற்கு இலங்கை அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் இவர்களுக்கு பக்கபலமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

0 Responses to தமிழ் கூட்டமைப்பு ஆதரவாளர் மீது பிள்ளையான் குழுவினர் தாக்குதல்