Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை மேலும் திருத்தத்துக்கு உள்ளாக்க, ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தாம் தொடர்ந்தும் முன்நிற்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அதில் திருத்தங்களைச் செய்வதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, “ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதற்காக அணிதிரண்டுள்ள துஷ்ட சக்திகள், 19வது திருத்தச் சட்டத்தையும் மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. பிரஜைகளை பலவீனப்படுத்தி, அரசியல்வாதிகள் பலமாகிக்கொள்வதற்கு எதிராக, எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடத் தாம் தயாராக உள்ளோம்.” என்றுள்ளது.

0 Responses to 19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய அனுமதியோம்: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com