ஞாயிறு 6 - 6 - 2010 லண்டன் வடமேற்குப்பகுதியில் ஐக்கிய இராட்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழீழ தேசிய மாணவர் எழுச்சிநாள் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் எமது மக்கள் படும் இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகைக் கோரி ஜெனீவா ஐ.நா முன்றலில் தன்னைத் தீயிலிட்ட மாவீரன் முருகதாஸ் வர்ணகுலசிங்கத்தின் கல்லறைக்கு சென்று இளையோர் வணக்கம் செலுத்தினர்.
மாவீரன் முருகதாஸ் வர்ணகுலசிங்தின் தாயார் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைக்க பின்னர் ஒவ்வொரு இளையோராக மிக உணர்வுபூர்வமாக மெழுவர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் வணக்கம் செலுத்திய பின்னர் மண்டபத்திற்கு வந்து நிகழ்ச்சியை ஆரம்பித்தனர்.
அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாடல், எழுச்சி நடனங்கள் மற்றும் உணர்ச்சிக்கவிதைகள் எனத் தாயக உணர்வோங்கி நிற்கும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இறுதியில் சமர்க்களநாயகன், சமர்க்கள நாயகிகள் மற்றும் வீரத்தளபதிகள் எனும் மூன்று குறுவட்டுக்களும் தமிழர் பிராந்திய செயற்பாட்டாளர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.

0 Responses to மாணவர் எழுச்சி நாள் 2010: ஐக்கிய இராட்சியம் (படங்கள் இணைப்பு)