பிரான்சின் புறநகர்ப்பகுதியான செவ்றோன் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 16.00 மணிக்கு தியாகி பொன் சிவகுமாரனின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்சியாக முதலில் ஈகைச்சுடரேற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுரையாற்றப்பட்டது. அத்துடன் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு மாணவர்களால் கவிதைகள் வாசிக்கப்பட்டது. அத்துடன் தமிழீழத் தேசியத்தலைவரின் இளையோர் சம்பந்தமான சிந்தனைகள் வாசிக்கப்படது.
தியாகி பொன் சிவகுமாரனின் வீர வாழ்வின் வரலாறு வருகை தந்தோர்க்கு சிறப்பாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர் எழுச்சி நாளின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு கருத்துப் பரிமாற்றங்களும் செய்யப்பட்டது.
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை பிரான்சின் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
தியாகி பொன். சிவகுமாரன் புரட்சி கனன்ற பெருவீரன் நினைவாக... வாசிக்கப்பட்ட கவிதைப்பகுதி.
உரும்பிராய் தந்த
இரும்பு மனிதன்.
பூவான மனசுக்குள்
புரட்சி கனன்ற பெருவீரன்.
தன்னையும்
தன்னின மக்களையும்
நெஞ்சேந்திய
மாணவப்பிஞ்சு.
ஆதித் தமிழனின்
இருப்பும் விருப்பும்
அங்குலம் அங்குலமாய்
சிதைக்கப்படுகிறது.
பேரவலம்!
சுதந்திர தீயிடல்.
அரசாண்ட தமிழனின்
ஆணிவேர் வரை
ஊசி செருகும் குரூரம்.
சிங்களம்
தமிழ் மாணவரின்
கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம்
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபது.(1970)
குறும்பும்,
தன்னுணர்வும்,
தொலை நோக்கும்,
இலட்சிய தாகமும்,
சிவகுமாரனை
அசைவியக்கம் கொள்ள வைக்கிறது.
தமிழ் மக்களின்
அடிமைத் தழைகள் நீக்கி
சுதந்திர வாழ்வுக்காய்
சீரிய சிந்தனைகள்
செயல் வடிவம் கொள்கிறது.
1971ல் தமிழ் மாணவர் பேரவையில்
சிவகுமாரனின் பிரசன்னம்.
கொதித்துக்கொண்டிருந்த நெஞ்சோடு
கை கோர்க்கிறார்கள் தோழர்கள்.
புத்தகம் ஏந்தி,
பள்ளியும் பாடமும்,
விளையாட்டும் வீடும்
வாழ்ந்திருக்கலாம் இந்த
சிவகுமாரன்.
கண்முன்னே கொடுமைகள்
எப்படிக் கண்மூடித்தூங்க?
உயிர் குடிக்கும் துரோகங்கள் மீது
எழுபதுகளில் கத்தி வைக்கிறான்
இந்தப் பெருவீரன்.
ஓட்டமும் நடையும்
விடுதலை வேணவாவும்
ஓய்வின்றிய மாணவத்தமிழனுக்கு
சிறையில் சித்திரவதை.
வெளியே வந்தும் விடவில்லை அவன்!
மூச்செறிந்து முன்னேறுகிறான்.
மீண்டும் மீண்டும்
அடக்குமுறைக்கு எதிரான
இயங்கு நிலை.
அகவை 20
மீண்டுமொரு சிறை
அகவை 23
சிகரெட் காயங்களுடனும்
சிவந்த தழும்புகளுடனும்
சிங்கள நகங்கள் விலக
வெளியேறுகிறான் சிவகுமாரன்.
உயிராக மதித்த தமிழ்,
அறிவாக இருந்த
ஆங்கிலமும் சிங்களமும்
மதியுரை வழங்குவதில்
அவருக்கு நிகர் அவரே.
போராட்ட வடிவமென்பது
கொள்கைகளை முன்னிறுத்தி
உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி,
போராட்டம் மட்டுமே எமது
கொள்கையாக இல்லை
என்பதில் அவருக்குள் உறுதி இருந்தது.
நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்சியாக முதலில் ஈகைச்சுடரேற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தியாகி பொன் சிவகுமாரனின் நினைவுரையாற்றப்பட்டது. அத்துடன் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு மாணவர்களால் கவிதைகள் வாசிக்கப்பட்டது. அத்துடன் தமிழீழத் தேசியத்தலைவரின் இளையோர் சம்பந்தமான சிந்தனைகள் வாசிக்கப்படது.
தியாகி பொன் சிவகுமாரனின் வீர வாழ்வின் வரலாறு வருகை தந்தோர்க்கு சிறப்பாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர் எழுச்சி நாளின் முக்கியத்துவம் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு கருத்துப் பரிமாற்றங்களும் செய்யப்பட்டது.
தமிழீழ மாணவர் எழுச்சி நாளை பிரான்சின் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
தியாகி பொன். சிவகுமாரன் புரட்சி கனன்ற பெருவீரன் நினைவாக... வாசிக்கப்பட்ட கவிதைப்பகுதி.
உரும்பிராய் தந்த
இரும்பு மனிதன்.
பூவான மனசுக்குள்
புரட்சி கனன்ற பெருவீரன்.
தன்னையும்
தன்னின மக்களையும்
நெஞ்சேந்திய
மாணவப்பிஞ்சு.
ஆதித் தமிழனின்
இருப்பும் விருப்பும்
அங்குலம் அங்குலமாய்
சிதைக்கப்படுகிறது.
பேரவலம்!
சுதந்திர தீயிடல்.
அரசாண்ட தமிழனின்
ஆணிவேர் வரை
ஊசி செருகும் குரூரம்.
சிங்களம்
தமிழ் மாணவரின்
கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம்
ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபது.(1970)
குறும்பும்,
தன்னுணர்வும்,
தொலை நோக்கும்,
இலட்சிய தாகமும்,
சிவகுமாரனை
அசைவியக்கம் கொள்ள வைக்கிறது.
தமிழ் மக்களின்
அடிமைத் தழைகள் நீக்கி
சுதந்திர வாழ்வுக்காய்
சீரிய சிந்தனைகள்
செயல் வடிவம் கொள்கிறது.
1971ல் தமிழ் மாணவர் பேரவையில்
சிவகுமாரனின் பிரசன்னம்.
கொதித்துக்கொண்டிருந்த நெஞ்சோடு
கை கோர்க்கிறார்கள் தோழர்கள்.
புத்தகம் ஏந்தி,
பள்ளியும் பாடமும்,
விளையாட்டும் வீடும்
வாழ்ந்திருக்கலாம் இந்த
சிவகுமாரன்.
கண்முன்னே கொடுமைகள்
எப்படிக் கண்மூடித்தூங்க?
உயிர் குடிக்கும் துரோகங்கள் மீது
எழுபதுகளில் கத்தி வைக்கிறான்
இந்தப் பெருவீரன்.
ஓட்டமும் நடையும்
விடுதலை வேணவாவும்
ஓய்வின்றிய மாணவத்தமிழனுக்கு
சிறையில் சித்திரவதை.
வெளியே வந்தும் விடவில்லை அவன்!
மூச்செறிந்து முன்னேறுகிறான்.
மீண்டும் மீண்டும்
அடக்குமுறைக்கு எதிரான
இயங்கு நிலை.
அகவை 20
மீண்டுமொரு சிறை
அகவை 23
சிகரெட் காயங்களுடனும்
சிவந்த தழும்புகளுடனும்
சிங்கள நகங்கள் விலக
வெளியேறுகிறான் சிவகுமாரன்.
உயிராக மதித்த தமிழ்,
அறிவாக இருந்த
ஆங்கிலமும் சிங்களமும்
மதியுரை வழங்குவதில்
அவருக்கு நிகர் அவரே.
போராட்ட வடிவமென்பது
கொள்கைகளை முன்னிறுத்தி
உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி,
போராட்டம் மட்டுமே எமது
கொள்கையாக இல்லை
என்பதில் அவருக்குள் உறுதி இருந்தது.
0 Responses to பிரான்சில் நடைபெற்ற தியாகி சிவகுமாரனின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு