நேற்று (7) மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்த சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அரசியல் தீர்வு, அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டிருந்ததாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று (8) இந்தியா பயணமாவதற்கு முன்னர் மகிந்தா இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
நடவடிக்கையின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்தாவின் இந்திய பயணத்தின் பின்னரே ஆரயப்படும் என பேச்சுக்களில் கலந்து கொண்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஏனினும் மகிந்தாவின் இந்திய விஜயம் தொடர்பில் கூட்டத்தில் பேசப்படவில்லை.
இரு தரப்பும் நம்பிக்கைகளை ஏற்படுத்த முயன்றிருந்தன. தன்னை நம்பும்படி மகிந்தா எம்மை கேட்டுக்கொண்டார். நம்பிக்கை ஏற்படும் போது அரசியல் தீர்வைக் காண்பது இலகுவானது. நாம் தனிநாட்டை கோரவில்லை. அதனை நாம் எமது தேர்தல் கொள்கைகளிலும் முன்வைக்கவில்லை. ஓரு நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் தான் தீர்வைக்காண விரும்புகிறோம்.
தற்போது ஒரு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது, எனினும் நிலைமை எவ்வாறு செல்கின்றது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் பல தரப்பட்ட விடயங்களை ஆராய்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பிலும் கலந்துரையாடினோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தன்னை நம்பும்படி மகிந்த எம்மிடம் கேட்டுக்கொண்டார்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு