Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கொடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக யப்பான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முறியடித்த சிறீலங்கா அரசு அதன் ஓராண்டு விழாவை கொண்டாடி வருகின்றது. ஆனால் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றாத சமயத்தில் அதனால் களமுனை வெற்றியை தக்கவைக்க முடியாது.

சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கான தீர்வுகளை காணமுற்படாது, எதிர்க்கட்சிகளின் குரல்களை சிறிலங்கா அரசு அடக்க முற்படுவது ஒரு தலைமுறையினருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது இழந்ததாகவே இருக்கும்.

மகிந்தா அரசு தற்போது கூட அதனை மேற்கொள்ள முடியும். அதன் மூலம் சிறிலங்காவில் இனங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும். சிறீலங்காவின் எதிர்காலம் அதில் தான் தங்கியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கெடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த மோதலில் கொல்லப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கைகள் தெரியாது. ஏனெனில் மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு ஊடகவிலயாளர்களைளோ அல்லது அனைத்துலக அமைப்புக்களையோ சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வன்னி யுத்தத்தின் போது 40,000ம் வரையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: த யப்பான் ரைம்ஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com