Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு, ரெட்பானா பகுதியில் இரவு வேளை வீடொன்றினுள்ளே புகுந்த இலங்கை இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்பப் பெண்கள் மீது பாலியல் குற்றம் புரிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்து, வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் இருவரும் இன்று சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

நாடாளுமன்ற அமர்வின்போது இந்தச் சம்பவம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்த சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றார்கள்.

0 Responses to விசுவமடுவில் குடும்ப பெண்கள் மீது இராணுவத்தினர் பாலியல் வன்முறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com