Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் அரசியல் புலத்தில் வெளி விவகார அமைச்சர்களாக இருந்தவர்கள் இனப் பிரச்சினை நீண்டதூரம் நகர்ந்து செல்வதற்கு பெரும் துணையாற்றினர் என்றால் அது மிகையன்று. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் வெளி விவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடைசெய்வதில் பெரும் பணியாற்றினார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை அரசு முன்வைப்பதற்குப் பதிலாக விடுதலைப் புலிகள் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர் கூறியதன் உள்நோக்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிப்பதிலிருந்து அரசுக்கு ஆறுதல் கொடுப்பதாகும். உலக நாடுகளில் தமிழ்மக்களுக்கு எதிராக அவர் செய்த பிரசாரம் சர்வதேச சமூகத்தை திசை திருப்பியதென்றே கூறவேண்டும்.

லக்ஷ்மன் கதிர்காமர் தனித்து வெளிவிவகார அமைச்சர் என்றல்லாமல், அவர் ஒரு தமிழர் என்ற கோதாவிலும் அவர் கூறியவற்றை உலக நாடுகள் செவிமடுத்தன. தொடர்ந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரோகித போகொல்லாகம வன்னி யுத்தத்தின் போது உலக நாடுகளுக்கு மகா அபிஷேகத்துடன் சோடச உபசரணை செய்து அந்த நாடுகளை தமிழர்களுக்கு எதிரான நிலையில் தக்கவைத்துக் கொண்டார்.

லக்ஷ்மன் கதிர்காமருக்கு சளைக்காமல் போகொல்லாகமவும் தமிழர்களுக்கு எதிரான பிரசாரத்தை செய்திருந்தார்.ஆனால் அவை வெளிவராத விடயமாகிப் போக, இப்போது அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ளார். யுத்தத்திற்குப் பின்பான முதலாவது வெளி விவகார அமைச்சர் என்ற பெருமையைப் பெறும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படாத சந்தர்ப்பத்தில் அதற்கான பதிலையும் வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் உதவ வேண்டுமென்ற கோ­த்தை இனிமேல் இலங்கை அரசு முன்வைக்க முடியாது. மாறாக யுத்தத்தின் போது அரசு பயங்கர வாதச் செயலை மேற்கொண்டது என்ற .நாவின் குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கான ஆதாரங் களை முன்வைக்க வேண்டிய மிக இக்கட்டான கட்டத்தில் இலங்கை அரசு இருக்கின்றது. இந்தப் பொறுப்பை செய்யவேண்டியவர் அமைச்சர் பீரிஸ்.

லக்ஷ்மன் கதிர்காமரை மற்றும் ரோகித போகொல்லாகமவை ஒரு மூலைக்குத் தள்ளி விட்டு வெளிவிவகார அமைச்சரென்றால் அது பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தான் என்பதை நிரூபித்துக் காட்டப் புறப்பட்ட அவர் இப்போது கோபப்பட்டு .நாவையும் தூக்கியயறிந்து பேசும் ரென்சனுக்கு வந்துவிட்டார். .நாவை எதிர்த்துப் பேசும் துணிவை இச் சிறிய நாட்டிற்கு யார் கொடுத்தது என்று கேட்டால், .நா சபையும் உலக நாடுகளும் என்பதே பதிலாகும்.

அதாவது முன்னைய வெளிவிவகார அமைச் சர்களின் பொய்யுரைகளை .நாவும் உலக நாடுகளும் நம்பாமல் இருந்திருந்தால் இன் றைக்கு .நா சபையை தூக்கி எறியும் துடுப்பு இலங்கைக்கு அறவே இருந்திருக்காது என்பதே நிஜம்.

0 Responses to ஐ.நாவை எதிர்க்கும் துணிவை இலங்கைக்கு கொடுத்தது யார்? வலம்புரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com