Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தோண்டத் தோண்டத் தமிழர்களின் பிணங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன - ஐக்கிய நாடுகள் சபை, முறையான விசாரணையைத் தொடங்குமானால், அங்கே இடம்பெற்றுள்ள போர்க் குற்றங்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைக்கும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சு..வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்திய சர்வதேச திரைப்படவிழா நடத்தப்படுகின்றமையைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

"மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க்குற்றச் சட்டம் தூங்கி இருக்க மாட்டாது. அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஸ சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸை வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி குற்றங்களை மறைக்க முயற்சி செய்து வருகிறது.

இன்னொன்று, கலாசார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி, அதன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்கிறது. இரண்டாவது முயற்சிக்கான அடிப்படைதான், அனைத்துலகத் திரைப்பட விழா. அந்த விழாவுக்கு இந்திய அரசு துணை போவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

உலகம் கண்டிராத கொலைக்களப் பூமியில், உல்லாசமாகத் திரைப்பட விழா நடத்துவது எவ்வளவு பெரிய வக்கிரம். அதற்கு அமிதாப் பச்சன் போன்ற புகழ்பெற்ற இந்திய நடிகர்களை அழைத்திருக்கிறது இலங்கை அரசு. தி.மு.கழக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

".ஆர்.ரகுமான் போன்ற தமிழர்கள் ஒஸ்கர் பரிசு வாங்கிவந்தால், அவரை இந்தியர் என்று சொல்லிக் கொண்டாடுகிறீர்கள். கன்னியாகுமரிக் கடற்கரையில் இந்தியக் குடிமக்களான மீனவர்கள் கொல்லப்பட்டால், அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கி விடுகிறீர்கள் என்றார்.

எப்போதும் அப்படித்தான் நடக்கிறது. ஆனால் இப்போது ஒரு சிறிய மாறுதல். முதலில், திரைப்பட விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் முதலான புகழ்பெற்ற நடிகர்கள், அவ்விழாவில் பங்கேற்கவே இல்லை. மும்பையில் உள்ள 'நாம் தமிழர்' இயக்கத்தினர் நடிகர் அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு, மனுக்கொடுத்து விடயங்களை விளக்கியமைஅமிதாப்பின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம்.

அந்த வகையில் நாம் தமிழர் இயக்கப்பணி பாராட்டிற்குரியது. அதே போன்று, சென்னையில் மே 17 இயக்கத்தினரும் சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையைச் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு தமிழ் அமைப்பினர் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். திரை உலகினரின் இன உணர்வுக்கும், மனித நேயத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் விவேக் ஓபராய் போன்ற நடிகர்கள் சிலரின் மனிதநேயமற்றசெயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீஎல். பீரிஸ், சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, .நா. சபையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித் திருக்கிறார்.

"இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் .நா. தலையிட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்., "நாங்களே ஒரு விசாரணை வைத்து முடிவைச் சொல்கிறோம்" என்றும் கூறியிருக்கிறார். குற்றவாளியே விசாரணைக் குழு அமைத்துக் கொள்ளும் ஒன்பதாவது உலக அதிசயம் இதுதான்.

அவர் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் பெரிஸ் சந்தித்துப் பேசி இருக்கிறார்.இந்நிலையில் ஜனநாயகத்திலும், சகோதரத்துவத்திலும், மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது.

மிகக் கொடூரமான போர்க் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உலக நாடுகளும், .நா.சபையுயும் இடம் கொடுத்தவிடக் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்."

0 Responses to ராஜபக்‌ஷ குடும்பத்தினரை கூண்டில் நிறுத்தும் காலம் நெருங்குகின்றது: பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com