இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள புலிகள் இயக்கம் மேற்கொண்டுவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியை சா்வதேச சமூகம் முறியடிக்கவேண்டும் என பிரதமர் தி.மு.ஜயரத்ன கோரிக்கை விடுத்தார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜப்பானிய அரசின் விசேட தூதுவர் யசூஷி அகாஷியை சந்தித்து உரையாடும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்றும் பிரதமா் இங்கு சுட்டிக்காட்டினார்.



0 Responses to நாடு கடந்த தமிழீழ அரசை சர்வதேச சமூகம் முறியடிக்க வேண்டும்: அகாசியிடம் பிரதமர்