Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக தமிழ் இளையோர் அமைப்பு யூன்6 ஆம் நாளை மாணவர் எழுச்சி நாளாக உலக பரப்பெங்கும் உள்ள தமிழ் இளையவர்கள் கடைபிட்டித்து இருந்தனர்.

அந்த வகையில் கனடா தமிழ் இளையோர் அமைப்பு நேற்றய நாளை மாணவர் எழுச்சி நாள் நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சி கனேடிய மற்றும் தமிழீழ தேசியக் கொடியேற்றத்துடன்ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து முதலாவது தமிழீழ மாணவ மாவீரரான பொன்.சிவகுமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பல்கலைகழக, கல்லுரி மற்றும் பாடசாலை மாணவர்களும் இணைந்து எழுச்சி நடனங்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் பலவற்றை மாணவர்கள் நிகழ்த்தியிருந்தனர். குறிப்பாக பல்கலைக்கழக மற்றும் கல்லுரி மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் எழுச்சி உரையினை நிகழ்த்தியிருந்தனர்.

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவாக நடத்தப்பட உதைபந்தாட்ட போட்டிகளின் வெற்றியிட்டிய அணிகளுக்கு வெற்றிகின்னங்கள் வழங்கபட்டது. நிகழ்வுகளில் நாடகங்கள் தயக்கத்தில் தமிழ் மாணவர் சமூகம் படும் இன்னல்களை எடுத்துக்காடுவனாக அமைந்தது நிகழ்ச்சின் நிறைவில் தமிழீழ விடுதலை போராட்டத்தை புலம்பெயர் மாணவர் சமூகம் நாங்கள் எடுத்து செல்வோம என உறுதி எடுத்துகொன்டனர். நிகழ்வுகள் யாவும் தமிழ் மக்களின் எழுச்சியுடன் நிறைவடைந்தது

0 Responses to கனடிய தமிழ் மாணவர் சமூகம் முன்னெடுத்த மாணவர் எழுச்சிநாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com