வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்தியகலாநிதி கைலைநாதன் சுதர்சன் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவான ரி.ஐ.டி. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட் டுள்ளார்.
யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாள்களின் பின் தன்னை வைத்தியர் என இனங்காட்டாது முகாமி லிருந்து வெளியேறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து இந்தியா சென்றி ருந்தார்.
அங்கு தனது மேற்படிப்புத் தொடர்பான விடயங்களைக் கவனித்திருந்தவேளை கியூப் பிரிவினருக்கு இவர் ஒரு வைத்தியர் என்றும் இறுதி யுத்தம் வரை வைத்தியராகப் பணியாற்றியவர் என்றும் தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரிடம் பல முறை சென்ற கியூப் பிரிவுப் பொலிஸார் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு தடவை சிங்கப்பூர் சென்றிருந்த அவர் மீண்டும் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குத் தனது குடும்பத்தினருடன் சென்றார்.
எனினும் கியூப் பிரிவுப் பொலிஸார் சிங் கப்பூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதனையடுத்து விமான நிலையத்தில் வைத்தே இலங்கைக்கு வைத்தியகலாநிதி கைலைநாதன் சுதர்சனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டனர்.
அவ்வாறு நாடு கடத்தப்படும்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்குச் சிங்கப்பூர் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலையடுத்துக் கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் 2 ஆம் மாடியில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

0 Responses to வைத்திய கலாநிதி சுதர்சன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது