Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரேரணைகளை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் அவரிடம் விவாதிக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என்று வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் - இனப்பிரச்சினை தீர்வுத் திட்டம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராகவுள்ளதாக கூறியுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸுடன் தான் இது தொடர்பில் பேச்சு நடத்தியதாகவும் அவர் கூறுகின்றார். பேராசிரியர் பீரிஸுடனான சந்திப்பின்போது அரசியல் தீர்வு தொடர்பாகவும் ஒரு ஆரம்ப முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. என்றாலும் இரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் இது வரை அவரைச் சந்திப்பதற்கான அழைப்பு அரச தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது தகவல்களை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் மூலமாக ஏற்படுகின்ற ஒரு தீர்வு என்னவிதமாக அமையலாம் என்பது பற்றி அந்தக் கூட்டத்தில் ஒரு ஆரம்ப கட்ட பரிசீலனை செய்யப்பட்டதாக மட்டுமே தற்போது கூற இயலும் என்றும் சம்பந்தன் கூறுகின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தாங்கள் தெரிவித்திருந்ததை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டுகின்றார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரேரணைகளை இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னர் அவரிடம் விவாதிக்க வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என்று வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை யில்லை என்றும் சம்பந்தன் கூறுகின்றார்.

எனினும் பல விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு இந்தியாவுடன் பேசிவருவதாகவும் அவர் கூறுகின்றார். இலங்கை ஜனாதிபதி இம் மாதம் 8 ஆம் திகதி புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மகிந்தவுக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com