Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாய்த் தமிழ் நாட்டில் நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிட உரிமைகோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்டவாளர்களை பாராட்டுவதில் டென்மார்க் தமிழர் பேரவையினர் பெருமைகொள்வதுடன் வேதனையும் அடைகின்றோம்.

கடந்த ஆண்டு தமிழீழத்தை முழுமையாக வன்பறிப்பு செய்த சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்ததுடன் தமிழ் மொழியையும் இல்லாதொழிக்க கடும் முயற்சி செய்துவருகின்றது.

உலக தமிழர்களின் தலைவரென கூறிக்கொள்ளும் ஒருவர் தாய் தமிழகத்தை ஆட்சிசெய்தும் எமது இனம் கடந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களையும் சொத்துக்களையும் இழந்தது.

இந்த பேரவலத்தில் இருந்து எமது மக்களை காப்பாற்றகோரி முத்துக்குமாரன் தொடக்கம் பல எமது தாய் தமிழக உறவுகள் தீக்குளித்தார்கள். எதனையும் உலக தமிழர்களின் தலைவர் கண்டுகொள்ளவில்லை.

இப்பொழுது இந்திய கூட்டாச்சியில் உள்ள தமிழகத்திலேயே தமிழ் மொழியில் நீதீமன்றங்களில் வாதிட உரிமைகோரி சட்டவாளர்கள் சாகும் வரையான பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். தமது சொந்த நாட்டில் தமது தாய் மொழியை பேச உரிமைகோரி போராட வேண்டிய அவலம் எமது இனத்திற்கு இன்று ஏற்பட்டுள்ளது. இந்த அவலம் அனைத்துலகத்தில் எந்த ஒரு இனத்திற்கும் ஏற்படவில்லை.

தாய் தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து போராடி உயிர் நீத்தவர்களை இந்த நேரத்தில் நாம் நினைவில் கொள்கின்றோம். அந்த மாமறவர்களின் தியாகத்தை மதிப்பதாக கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் இன்று தமிழ் மொழிக்காக போராடும் எமது உறவுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை காப்பாற்ற முன்வருவாரா? அல்லது எமது இனத்தின் அவலங்களை மறைத்து தமிழ் மொழிக்கென விழாவெடுத்தேன் என்ற அவப்பெயரை பெற்றுக்கொள் முனைவாரா?

பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்பான எமது உறவுகளே!

முத்துக்குமாரன் தொடக்கம் அத்தனை எமது உறவுகளும் செய்த தியாகத்தை காந்தி தேசமோ கலைஞரோ கண்டுகொள்ளவில்லை. உங்களின் போராட்டத்தையும் இவர்கள் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கில்லை.

ஆகவே உங்கள் போராட்ட கோரிக்கை வெற்றிபெற வாழ்த்தும் அதே நேரம் எமது மொழியை காப்பாற்றுவது எம்மெல்லோரதும் கடமையே அதே போல் எம்மினத்தின் மக்களையும் தொடர்ந்து இழக்க நாம் விரும்பவில்லை. என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

அனைத்துலகத்தில் தமிழினத்திற்கென்று சுயநிர்ணயமுடய ஒரு நாடு இல்லாத மட்டும் எம்மக்கள் தொடர்ந்து போராடுவதும் தமிழ் உயிர்களை இழப்பதுமே வரலாறாகும்.

தமிழால் ஒன்றிணைவோம்! தமிழ் மொழியையும் தாய் தமிழ் நாட்டிரண்டையும் காத்திடுவோம்!

சந்தோஷ்
செயலாளர்
டென்மார்க் தமிழர் பேரவை

0 Responses to தாய்த்தமிழ் நாட்டில் தமிழ் மொழிக்கான பட்டினிப் போராட்டம்: டென்மார்க் தமிழர் பேரவையின்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com