வணக்கம்!!எதிர் வரும் 20-06-2010 அன்று கனடா நாட்டில் நடைபெற இருக்கும் கனடிய தமிழர் தேசியஅவைக்கான தேர்தல் நடைபெறப்போகும் செய்தி அறிந்து இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை பெருமிதம்அடைகிறது.
தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடகிழக்குப் பகுதி சிறீலங்காபடையினரால் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டுஇ தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுஇருக்கின்ற இந்த அசாதாரண நிலையில்இ புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களேஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை மீளப்பெறுகின்ற ஒரேயொரு சக்தியாக திகழ்கின்றனர்.
தமிழ் மக்கள் அனைவரும் தேசியம் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு விரைவாகவும் விவேகமாகவும்செயல் பட வேண்டிய ஓர் முக்கியமான கால கட்டம் இது என எல்லோராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றஇந் நிலையில் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் தமக்கான ஓர்வளமிக்க அமைப்பாக மக்களவைகளை தோற்றுவித்து வருகின்றன.
இவ் மக்களவைகளானது அந்தந்த நாட்டு சட்ட வரம்புகளுக்கு அமைவாக சனநாயக விழுமியங்களுக்குஅமைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பாககட்டியமைக்கப்பட்டு வருகின்றது. சென்ற வருட இறுதியிலும், இவ் வருட முற்பகுதியிலும்வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள் வலியுறுத்திய புலம் பெயர் தமிழ் மக்கள் அதனை வென்றுஎடுப்பதற்கான அரசியல் கட்டமைப்புகளாக இவ் மக்களவைகளை தோற்றுவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முதல் முறையாக நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவதாக 21-03-2010 அன்று இத்தாலிவாழ் ஈழத்தமிழ் மக்களின் ஆணையுடன் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை உருவாக்கம் பெற்றது. தற்போதுஅதன் செயற்திட்டத்தின் அடிப்படையின் படி பிரதேச ரீதியாக மக்களின் ஆலோசனைகளையும்கருத்துக்களையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
இவ்வகையில் எதிர் வரும் 20-07-2010 அன்று நடை பெறவிருக்கும் தேர்தல் மூலம் தோற்றம்பெறவிருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவைக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும் இத்தாலி ஈழத்தமிழர்மக்களவையானது தனது மனப்©ர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எதிர் காலத்தில் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையின் புலம் பெயர் தேசங்களின் தமிழர் நலம் சார்ந்தபணிகளில் ஈடுபடும் அமைப்புகளுக்கு வலுச்சேர்த்தல் என்ற செயற்திட்டத்திற்கு அமைய கனடிய தமிழர்தேசிய அவையுடன் இணைந்து செயற்பட உறுதி©ண்டுள்ளது என்பதனை இச்சந்தர்ப்பத்தில்தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்வு அடைகின்றோம்.
அத்துடன் இத் தேர்தலை முன் நின்றுநடத்தும் தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பினர்க்கும்இ கனடிய தமிழர் தேசிய அவைதேர்தலுக்கான செயற்குழுவிற்கும், கனடிய வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிபெருவாரியாக வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
"வீழ்வது நாமாகிலும் வாழ்வது எமது போராட்டம்" என்ற இலட்சியத்துடன் சாவினைதழுவிய எம் மாவீரர்களினதும்இ பொது மக்களினதும் இலட்சிய உறுதியை எம் மனங்களில் உரமாக்கிஎமது பயணத்தை தொடர்வோம்.
நன்றி
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை



0 Responses to இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: அறிக்கை