சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இராணுவத்தினர் உயர்மட்டத்திலிருந்து கிடைத்த உத்தரவின்படி சுட்டுக்கொன்றனர் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா செவ்வி வழங்கியபோது குறிப்பெடுத்த புத்தகத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்கும்படி சண்டே லீடர் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜான்ஸிற்கு கொழும்பு மாஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்சேகா தொடர்பான வழங்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சண்டே லீடர் ஆசிரியர் பிரட்ரிக்கா ஜேன்ஸ் அவசரகாலச்சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என்று குற்றப்புலனாய்வு பிரிவின் சார்பில் வழக்கில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
குறிப்பிட்ட செவ்வியை பொன்சேகாவிடம் பெற்றுக்கொண்டபோது பயன்படுத்திய குறிப்புப்புத்தகத்தை தரும்படி குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரியபோது பிரட்ரிக்கா ஜேன்ஸ் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்றும் நீதிமன்றம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதனைஅடுத்து, வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது சண்டே லீடர் ஆசிரியரை குறிப்பிட்ட குறிப்பு புத்தகத்துடன் நீதிமன்றில் ஆஜராகும்படி நீதிவான் திருமதி சம்ப ஜானகி ராஜரட்ண உத்தரவிட்டார்.

0 Responses to பொன்சேகா வழக்கு விசாரணை: சண்டே லீடர் ஆசிரியரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு