சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு பொன்சேகா முயற்சி செய்தால் அவரை தூக்கில் போடுவோம் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச. நாட்டுக்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனையே வழங்கப்படும் என்றும் அவர் அடித்துக்கூறியுள்ளார்.
பி.பி.ஸி. செய்திச்சேவையின் ஹார்ட் டோக் என்ற நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஸ்டீபன் ஸக்கர் கேட்ட கேள்விடி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினர் போர்க்குற்றங்களை மேற்கொண்டார்கள் என்றும் அதற்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகளை கிடைக்கப்பெற்றார்கள் என்றும் வெளிவரும் தகவல்கள் தொடர்பில் தான் சர்வதேச நீதிமன்றில் சாட்சியமளிக்க தயார் என்று சிறையிலிருந்தவாறே பொன்சேகா செவ்வி வழங்கியிருக்கிறாரே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கோத்தபாய பதிலளிக்கையில் -
பொன்சேகா ஒரு பொய்யர். துரோகி. நாட்டை காட்டிக்கொடுப்பதற்கு முயற்சி செய்கிறார். அவர் அவ்வாறு நீதிமன்றில் ஏறி நாட்டுக்கு எதிராக சாட்சியமளிக்க முயற்சி செய்தால் அவரை தூக்கில் போடுவோம்.
சிறிலங்கா எனப்படுவது ஒரு சுதந்திர நாடு. அங்கு மூன்றாம் தரப்பு ஒன்று வந்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. அதற்கு நாம் அனுமதிக்கவும் மாட்டோம். இறுதிக்கட்ட போரில் சிறிலங்கா இராணுவமோ விடுதலைப்புலிகளோ மேற்கொண்ட குற்றங்கள் என்று கூறப்படுபவை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு சுதந்திரமான விசாரணைக்குழுவை சிறிலங்கா அரசு நியமித்துள்ளது. விசாரணைகளை நேர்த்தியாக மேற்கொள்வதற்கு அந்த குழுவுக்கு வலு உள்ளது. அது தன் கடமையை செய்யும் என்று கூறியுள்ளார்.

0 Responses to நாட்டுக்கு எதிராக சாட்சியமளித்தால் பொன்சேகாவை தூக்கில்போடுவோம்: கோத்தபாய