"ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ வழிவகுக்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும்'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழு ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பொஸ்கோவை சந்தித்து வலியுறுத்தியது.ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக் களான செல்வம் அடைக்கலநாதன், எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
யுத்தம் காரணமாகத் தமது சொந்தக் கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்தக் கிராமங்களி லேயே குடியமர்த்தவேண்டும். இராணுவ முகாம்கள் அமைப்பதற்கும், வேறு பல அரச தேவைகளுக்கும் மக்கள் வாழ்ந்த காணிகள் பயன்படுத்தப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அம்மக்களை அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இதேவேளை, இடம்பெயர்ந்து மீள் குடிய மர்த்தப்படும் மக்கள் தமது வாழ் வாதாரங்க ளைப் பெற்றுக்கொள்ளவும் ஐ.நா. வழிவகை செய்யவேண்டும் எனவும் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது என வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



0 Responses to தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழி ஏற்படுத்தவேண்டும்