சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடும் உரிமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்குக் கிடையாது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.
இவ் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற விவாதங்களின் போது அங்கத்துவ நாடுகளில் பெரும்பான்மையானவை சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் நவநீதம்பிள்ளை மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோருவது நியாயமற்றது என அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது குறித்து அவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
‘நவநீதம்பிள்ளையின் கோரிக்கை நியாயமற்றது. சிறிலங்கா மீது அழுத்தங்களை ஏற்படுத்தாமல் சிலருக்கு இருக்க முடியாது’ என குறிப்பிட்ட அவர், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டை நவநீதம்பிள்ளை விளங்கிக் கொள்ளத் தவறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டன் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய நாடுகளைப் பாதுகாப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந் நிலையில் சிறிய நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு நவநீதம்பிள்ளை முற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ ‘தலை தப்பினால் காணும், தம்பிரான் புண்ணியம்’ எனும் நிலையிலேயே சிறிலங்கா தற்போதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நவநீதம்பிள்ளை மீது பீரிஸ் பாய்ச்சல்