Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சாதகமான கருத்துக்களைப் பல உலக நாடுகள் வெளியிட்டிருப்பதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இறுதிப் போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான பன்னாட்டு சுயாதீன ஆய்வுக்கு இன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இவ்வாறான பன்னாட்டு ஆய்வை நிகழ்த்துவதற்கான அவசரத் தேவை எதுவும் தற்பொழுது நிலவவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

நாமொரு இறையாண்மை பொருந்திய தேசம். மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே இதுவிடயத்தில் நாங்களே முடிவை எடுப்போம்.

ஏற்கனவே நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை பல உலக நாடுகள் வெளியிட்டுள்ளன. கடந்த காலத் தவறுகளை நாமாகவே திருத்திக் கொள்வதிலேயே நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம். இது விடயத்தில் பன்னாட்டு ஆய்வுக்கான அவசரத் தேவை எதுவும் எழுந்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஏற்கனவே இதற்கென நல்லிணக்க ஆணையம் ஒன்றை நாம் அமைத்துள்ளோம்.’ இவ்வாறு சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு நிறுவியுள்ள நல்லிணக்க ஆணையம் நம்பிக்கையை அளிப்பதாக கடந்த சனிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளின்ரன் தெரிவித்திருந்த நிலையில், இதனை தமக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதி வியாக்கியானமளிக்கும் வகையில் சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சரின் கருத்துக்கள் அமைந்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

0 Responses to எமக்குப் பக்கபலமாக பல உலக நாடுகள் நிற்கின்றன! சிங்கள அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com