Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டனில் இன்று (06-06-2010) மாணவர் எழுச்சி நாளும்இ தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நிகழ்வும் நடைபெற்றது. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு வடமேற்கு லண்டனில் உள்ள கனொன்ஸ் கைய்ஸ்கூல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை திரு. ஜனநாயகம் அவர்கள் ஏற்றிவைக்க தொடர்ந்து போரினால் உயிர் நீத்த மக்களுக்கும்இ மாவீரர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து எழுச்சி நிகழ்வுகளாக கவிதைஇ பாடல்இ எழுச்சி நடனம் என்பனவும் இளையோர் சார்பில் உரையும் இடம்பெற்றது. முதலாவதாக செல்வி. கீர்த்தி ஸ்கந்ததேவா அவர்களின்எங்கிருந்தாலும் எங்களின் இதயம் உங்களுக்காக ஒலிக்கும்என்ற பாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து செல்வி அபிஇ மற்றும் சசி அவர்களின் கவிதையும்இ திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்கள் தயாரித்து வழங்கிய எழுச்சி நடனமும் இடம்பெற்றது. இந்த எழுச்சி நடனத்தில் லலித சொரூபினியும் நடனமாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் செல்வி. தர்மினி தர்மராஜா அவர்களின் எழுச்சி நடனமும், ட்ண்ஃஜ் குழுவினரின் தாயகப் பாடலுக்கான நடனமும்இ இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாக தமிழ் இளையோர் அமைப்பின் உரையே இடம்பெற்றது. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி. சங்கரி உரையாற்றினார்.
இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு மாலை 7:00 மணிவரையும் இடம்பெற்றது. நிகழ்வின் இறுதி நிகழ்வாக தேசியக் கொடியை கையில் தாங்கைய வண்ணம் சிறுவரும்இ இளையோரும் மேடையில் தோன்றி எமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்இ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என கொடியை அசைத்து உரத்துக் கூறினர்.

அப்பொழுது மண்டபத்தில் இருந்த அனைத்து மக்களும் எழுந்து நின்று கரகொலி எழுப்பி அந்த உணர்வோடும்இ உறுதியோடும் தம்மையும் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் நிகழ்ச்சிகளை மிகவும் சிறந்தமுறையில் இளையோர் அமைப்பினர் ஒருங்கமத்து நடாத்தியிருந்தனர் என்பதோடு இதுவே பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட முதல் நிகழ்வுமாகும்.

இந்த நிகழ்விற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதிகளான சொரூபிஇ பாலாம்பிகைஇ ஜெயவாணி, ஆர்த்தி, சேகர், மொறிஸ், சந்தோஸ், கவிராஜ், கார்த்திக், விவேக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை அவர்களின் உணர்வையும், செயற்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. இந்த எழுச்சி நிகழ்வு உணர்வு பூர்வமாகவும்இ எழுச்சிகரமாகவும் இடம்பெற்றதோடு பெருந்திரளான மக்கள் இதில் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to லண்டனில் நடைபெற்ற மாணவர் எழுச்சி நாளும், தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவு நிகழ்வும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com