இலங்கையில் இடம்பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் சிறிலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விசாரணைக்குழுவின் நடவடிக்கைகளால் சரியான பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளமுடியாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவை தலைவர் நவநீதம்பிள்ளை அண்மையில் வலியுறுத்தியுள்ள நிலையில் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டனும் அதே கருத்தினை தெரிவித்துள்ளார்.
பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த யுத்தத்தில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், அங்கு மனித உரிமை மீறல் தொடர்பில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பிலிப் அல்ஸ்டன் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையிலேயே, சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் - சிறிலங்கா தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்திருந்தபோதும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள நம்பகரமான ஆதாரங்கள் அதற்கான தேவையை அதிகரித்திருக்கிறது.
இது தொடர்பில் சிறிலங்கா அரசு விசாரணைக்குழு ஒன்றை அமைத்திருப்பினும் உள்நாட்டில் அமைக்கப்படும் விசாரணைக்குழுக்களின் நடவடிக்கைகள் சரியான பெறுபேற்றை பெற்றுக்கொள்வதில்லை என்ற காரணத்தினால் சர்வதேச விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும்.
உள்நாட்டு விசாரணைக்குழுக்கள் பொதுவில் தமது உரிமைகளை சரியாக பயன்படுத்தி பொறுப்புக்களை நிறைவேற்றுவதில்லை என்பதற்கு அண்மையில் இஸ்ரேலில் இடம்பெற்றிருக்கும் நம்பவம் நல்ல உதாரணம் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to சிறி போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு பிலிப் அல்ஸடனும் வலியுறுத்து!