Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்திய நட்சத்திரங்களே, இனப்படுகொலையை ஆதரிக்காதீர்கள்!!

ஈவிரக்கமற்று கருவில் வளர்ந்த சிசுக்களைக்கூட விட்டுவைக்காது, எம்மினத்தை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தும், ஊனமாக்கியதும் மட்டுமல்லாது தற்பொழுதும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் வதைமுகாங்களில் அடைத்துவைத்து வதை செய்துகொண்டிருக்கும் சிங்களக் காட்டுமிராண்டிகளின் அழைப்பை ஏற்று ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவை, கொடுங்கோளர்களின் தலைநகரில் நடாத்துவதானது, உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்களின் நெஞ்சங்களில் வெறுப்பையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்திய திரை உலகமும் துணை போகின்றதா என ஒரு கணம் எம்மை சிந்திக்க வைக்கின்றது. அண்ணன் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினரின் இடைவிடாத போராட்டத்தின் மூலம், தமிழ்மக்களின் மனநிலையை சரியாக உணர்ந்து, இந்நிகழ்ச்சியிலிருந்து விலகிய அனைத்து இந்திய திரை உலக நட்சத்திரங்களிற்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு இந்நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கும் மிகுதியான திரை நட்சத்திரங்களிற்க்கு, நாம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறோம். அதாவது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றத்தை மூடி மறைப்பதற்காகவே ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழா சிறிலங்காவில் நடைபெறவுள்ளது.

போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது எதுவும் செய்யாத நீங்கள், தமிழ் மக்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை வெளிக்கொண்டுவரும் நடவடிக்கையில் சர்வதேச சமூகம் இறக்கியுள்ள இவ்வேளையில், உங்கள் சிறிலங்காவிற்கான பயணம், எம் இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மூடி மறைக்கும் ஓர் ஈனத்தனமான உத்தி என்பதனை புரிந்து கொண்டு, இந்நிகழ்விலிருந்து விலகிக்கொள்ளும்படி உரிமையுடன் வேண்டுகிறோம்.

டென்மார்க் பல்கலைக்கழக தமிழ்மாணவர்கள் ஒன்றியம்.

0 Responses to இந்திய நட்சத்திரங்களே, இனப்படுகொலையை ஆதரிக்காதீர்கள்: டென்மார்க் தமிழ்மாணவர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com