Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்தவொரு பிளவும் கிடையாது இப்படி அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி. அண்மையில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி தொடர்பாக வெளியான திரிபு படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மஹிந்த அரசால் தமிழர் பிரச்சினைக்கு உகந்த தீர்வு முன்வைக்கப்படுமாக இருந்தால் அத்தீர்வை நடைமுறைப்படுத்து வதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பெற்றுக்கொடுக்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு ஓரிரு நாள்களுக்கு முன் பேட்டி வழங்கி இருந்தார்.

எப்போதும் எதிர்ப்பு அரசியலையே முன்னெடுத்து வந்த கூட்டமைப்புக்குள் சம்பந்தரின் இக்கருத்தினால் பிளவுநிலை வெடித்துள்ளது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் அவர் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார் எனக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் அதிருப்தி யின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள் என்றும், எந்த நேரமும் அவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகக் கூடும் என்றும் அந்த ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான தகவல்கள் குறித்து அரியநேத்திரன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். கூட்டமைப்புக்குள் எந்தப் பிளவுமே கிடையாது என்று அவர் உறுதியாகக் கூறினார்.

அவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:-

எமது தலைவர் சம்பந்தர் அரசை எல்லா விடயங்களிலும் ஆதரிக்கப்போவதாக ஒருபோதும் கூறவில்லை. மாறாகத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், உரிய தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டால் அதை நிறை வேற்றுவதற்கு கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கும் என்றே கூறி இருந்தார்.

இது மிகவும் தூர நோக்கும், தெளிந்த சிந்தனையும்,அரசியல் சாணக்கியமும் மிகுந்த நிலைப்பாடாகும். எனவே, அவரின் இந்தக் கருத்தினால் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட வேண்டிய அவசியமே இல்லை. அவரின் நிலைப்பாடே கட்சியின் நிலைப்பாடாகும்.

அவர் ஒரு போதும் கட்சியைத் தவறாக வழிநடத்தவேமாட்டார் என்பதில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவாக உள்ளனர்.
கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என்பதெல்லாம் வெறும் வதந்திகளே. இன்று, நேற்று அல்ல 2004 ஆம் ஆண்டு முதலே, "இதோ கூட்டமைப்பு உடைந்து விட்டது....' என்றெல்லாம் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.

கூட்டமைப்பு உடைந்து விட வேண்டும் என்று பேரினவாதிகளும், தமிழின விரோதிகளும் பேரவாப்படுகின்றார்கள். நாம் இதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம். அரசியல் பேச்சுக்கான காலம் கனிந்து வருகின்ற நிலையில், இவ்வாறான விசமத் தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படு கின்றமை கவலை தருகிறது. ஆனால் தமிழர்கள் இவ்வாறான பிரசாரங்களை நம்பி ஏமாறவோ, குழப்பம் அடையவோ தேவை இல்லை. என்றார்

0 Responses to சம்பந்தர் மாறவுமில்லை, கூட்டமைப்பில் பிளவுமில்லை: அரியநேத்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com