Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிவந்தனின் .நாசபை நோக்கி நகரும் கால்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், சிவந்தனை நடந்து சென்று வரவேற்கவும், சுவிசில் உள்ள மக்களும் இந்த நடை பயணத்தில் பங்கேற்கும் வகையிலும் சூரிச் மாநிலத்திலிருந்து 3 இளையோர்கள் .நா. சபை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

சனிக்கிழமை Zürich லிருந்து Aarau மாநிலம் வரை 56 km தூரத்தை நடந்து சென்ற அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை Aarau மாநிலத்திலிருந்து Kirchberg எனும் இடம் வரை 62 km தூரத்தைக் நடந்து கடந்திருக்கின்றனர்.

வீதியோரங்களில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கரகோசங்களை எழுப்பி ஆதரவளித்ததுடன் சிலர் இணைந்தும் நடந்தனர். அத்துடன் உலர்உணர்வுகளையும் வழங்கினர். மக்களின் எழுச்சிகரமான வரவேற்பானது இளையோர்கள் 62 km தூரத்தை கடப்பதற்கு காரணமானது.

இன்று திங்கள் கிழமை Kernenried, Jegenstorf, Münchenbuchsee, schüpfen, Seedorf, Aarberg, Bargen, Kallnach, Kerzers, Ried Biel, Galmiz, Murten நகரங்கள் ஊடாக நடந்து செல்ல இருப்பதால், அந்தந்தப் பிரதேச வாழ் மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என சுவிஸ் ஈழத்தமிழரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எம்முடன் இணைய விரும்பினாள் எனும் இத் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொள்ளவும்.

· சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
· தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
· மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

ஜெனீவா செல்லும் சிவந்தனை வரவேற்க சுவிற்சர்லாந்தின் பிரதான அரசியல் அமைப்புக்களான ஈழத்தமிழரவை, மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து பாரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

கடல் கடந்து சுவிஸ் தேசம் வரும் சிவந்தனின் மனிதநேயத்திற்கும் தாய்நிலப் பற்றுக்கும் மதிப்பளித்து எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜரோப்பா தழுவிய தேசிய இன எழுச்சி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு வேண்டிநிற்கும் இவ்வேளை, அனைத்து சுவிஸ் மக்கள் சார்பிலும் தாம் சிவந்தனை எழுச்சியுடன் வரவேற்க இந்த மனிதநேய நடை பயணத்தை முன்னெடுத்துள்ளதாக சுவிசில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ் உணவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் தொடர்ந்து விநியோகம் செய்தவாறே இளையோர்கள் செல்கின்றனர்.

இறுதி நிகழ்வுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு வருபவர்கள் உங்கள் நகரங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்டு உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த தமிழ்மக்களின் அவாவையும் தாங்கி சிவந்தன் முன்னெடுக்கும் இலட்சியப் பயணத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களையும் தங்களது தார்மீக ஆதாரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
079 308 06 69
079 301 59 95
079 928 25 00



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிவந்தனின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க சுவிசிலிருந்து மூவர் ஐ.நா சபை நோக்கி நடை பயணம்: 2ம் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com