இலங்கையில் அவசர காலச் சட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேல் கடந்துள்ள போதிலும் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருவதாகவும் இது பிழையான செய்தியை உணர்த்தக் கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் செய்திச் சேவையான ஐ.ஆர்.ஐ. என். சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அளித்த செவ்வியில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் தற்போது அவசர நிலைமைகள் எது வும் கிடையாது எனச் சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசு பிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம் சப்பாரி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இலங்கை நாட்டு மக்கள் சட்டம் ஒழுங்கை மதிக்கவில்லை என்ற ஓர் கருத்து வெளிப்படக் கூடும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.இதேவேளை சர்வதேச மன் னிப்புச் சபையின் குற்றச்சாட்டுக் களை ஏற்றுக் கொள்ள முடியா தென நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீளப் போராட்டங்களைத் தொடர்வத னைத் தடுக்கும் நோக்கில் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டு வருவ தாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபை தேவையற்ற வகையில் கருத்துக் களை வெளியிட்டு வருகின்றது. சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள தாகவும் அதனைத் தாம் ஒப்புக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைகளை மாற்றி அமைப்ப தற்காகவே அரசாங்கம் பொலிஸாருக்கு விசேட பயிற்சிகளை வழங்க உத்தேசித்துள்ளது.
யுத்தம் முடிவடைந்துள்ள நிலை யில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதன் ஓர் கட்ட மாகவே உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to அவசர காலச் சட்டம் முடிவுக்குவரவேண்டும்: மன்னிப்புச்சபை