Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பூங்கா மற்றும் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் திருச்சி சிறையில் அடைக்கப்ப ட்டனர்.     பழ.நெடுமாறன் உட்பட 82 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்,   ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கக் கூடாது என்று பல்வேறு வழிகளில் முயன்று தோற்றுப்போய்,  ஏதாவது செய்ய வேண்டும் என்று,  இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்.  முதல்வருக்கு தெரியாமல் இது நடந்தி ருந் தால் இந்த இருட்டு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும்.    இல்லை யென்றால் நீதிமன்றம் மூலமாக அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, முன்பை விட அதிக சிறப்பம்சத்தோடு முள்ளியாய்க்கால் முற்றத் தின் இடிக்கப்பட்ட பகுதிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

0 Responses to இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக செய்த செயல்; அந்த பழி முதல்வர் மீதே விழுந்துவிடும் : பழ.நெடுமாறன் பேட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com