தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்த ஆதரவை திரட்டுவதற்கு தாயகத்திலுள்ள மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகளும் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாகச் செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு:
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
19-08-2010
ஊடக அறிக்கை
இலங்கைத்தீவில் 1505 ம் ஆண்டு வரை தமிழ்த் தேசம் தனது இறைமையை செவ்வனே பிரயோகிக்கக்கூடிய ஒரு தேசமாக விளங்கியது. அதன் பின்னர் மூன்று ஐரோப்பிய காலணித்துவ ஆட்சியாளர்களாலும் அதனைத் தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்களாலும் தமிழ்த் தேசம் தனது இறைமையை பயன்படுத்த முடியாதவாறு அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்டது.
தமிழ்த் தேசம் மீளவும் தனது இறைமை நிறுவிக் கொள்வதற்காக ஐரோப்பியர்களுக்கு எதிராக போராடி வந்துள்ளது. தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையில் இருந்து விடுபடுவதற்காக தந்தை செல்வா தலைமையில் நடைபெற்ற அகிம்சைப் போராட்டமும் பின்னர் நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் மிகவும் கொடூரமான முறையில் இராணுவ ரீதியாக நசுக்கப்பட்டுள்ளது.
ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னர் முன்னெப்போதும் இல்லாதளவில் தமிழ்த் தேசத்தை அதன் தனித்துவமான நிலப்பரப்பு, மொழி, குடித் தொகைப் பரம்பல், பண்பாடு, பொருளாதாரம் என்பவற்றை திட்டமிட்டு அழிப்பதற்கான பெருமெடுப்பிலான நடவடிக்கைகள் அரசினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் இருப்பின் அடிப்படைகளாக அமைவது அந்தத் தேசத்தின் நிலமும், மக்களுமாகும். நிலம் என்பது வரையறுக்கப்பட்டதும் பெறுமதிவாய்ந்ததுமான ஒரு தேசிய மூலவளம். ஒரு தேசத்தின் பண்பாட்டுத் தனித்துவம் பொருளாதார வாழ்வு, மொழி, வரலாறு என்பவற்றை அத்தேசத்தின் மண்ணில் இருந்து பிரித்துப் பாhக்க முடியாது.
தொடா்ச்சியான தாயக நிலப்பரப்பில், தனித்துவமான மொழி, பண்பாடு, பொருளாதாரம், வரலாறு என்பவற்றின் அடிப்படையில் தம்மைத் தாமே ஆட்சி செய்வதற்கான இறைமையை கொண்ட மக்கள் கூட்டத்தை உள்ளடக்கியது தேசம் எனப்படும்.
தேசம் என்பதற்கான மேற்கூறிய வரையறைகள் தேவைப்பாடுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக தமிழ்த் தேசம் விளங்குகின்றது. மேற் கூறியவாறு தேசம் என்பதற்கான வலிமையான தகைமைகளை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசத்தின் வலிமை மிக்க அந்தஸ்த்தை இல்லாது அழிப்பதற்காக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தேசத்திலுள்ள நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளில் முனைப்புக்காட்டி வருகின்றனர்.
1935 ல் இருந்து இன்றுவரை இலங்கைத்தீவில் சிங்கள ஆட்சியாளர்கள் (Governments) மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறியிருந்தாலும் சிங்கள தேசத்தின் நிலையான அரசுக் கொள்கையாக (State Policy) தமிழர் தேசத்தில் நிலப்பறிப்பும், அதில் சிங்களமயமாக்கும் குடியேற்றங்களும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில், தமிழ்த் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் சிங்களமயமாக்கும் குடியேற்றங்களை அமைத்தனர்.
இதன் வெற்றியைத் தொடர்ந்து 1949/1950 களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் கல்லோயா சிங்களமயமாக்கல் குடியேற்றத்திட்டம், திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியில் அல்லை கந்தளாய் சிங்களமயமாக்கல் குடியேற்றத்திட்டங்கள் என்பவற்றை ஏக காலத்தில் மேற்கொண்டது.
தொடர்ந்து 1980களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, பதவியா ஆகிய கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை விரட்டியடித்த பின்னர் அங்கு சிங்களமயமாக்கல் குடியேற்றங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கெவுளியாமடு உட்பட மட்டு அம்பாறை திருமலை மாவட்டங்களில் பல சிங்கள மயமாக்கல் குடியேற்றங்களையும் மேற்கொண்டது.
இதன் மூலம் தமிழ்த் தேசத்தில் தமிழர்களை சிறுபான்மையினராக்கும் செயற்திட்டத்தினை சிங்கள அரசு தீவிரப்படுத்தியது. உதாரணமாக இலங்கையின் உத்தியோக பூர்வமான குடிசன மதிப்பீடு 1871இல் மேற்கொள்ளப்பட்டபோது திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 19,449 இதில் 17,625 பேர் தமிழ் பேசும் மக்களாயும் (12,852 தமிழ், 4,773 முஸ்லீம்கள்), 519 பேர் சிங்களவர்களாயும் இருந்தனர்.
எனவே 1871 இல் மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 91% சதவீதம் தமிழ் பேசும் மக்களாயும் இருக்க சிங்களவர்கள் 3% சதவீதமாக மட்டும் இருந்தனர். 1901ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் போது திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்த சிங்களவர்களின் தொகை 1203 பேர் மட்டுமே. அதேவேளை அப்போதிருந்த நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் சிங்களவர்கள் சிறுபான்மையினராக இருந்ததுடன் மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 4% சதவீதமாக மட்டுமே காணப்பட்டனர்.
ஆனால் 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் போது திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான 255,948 பேரில் 85,500 பேர் சிங்களவர்களாயும், 75,039 பேர் முஸ்லீம்களாயும் 93135 பேர் தமிழர்களாயும் இருந்தனர். இதன்படி மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 33.4% சதவீதம் சிங்களவர்களாயும், 65.7% சதவீதம் தமிழ் பேசும் மக்களாயும் காணப்பட்டனர். அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் காணப்பட்ட ஒன்பது உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுள் நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் சிங்களவர்கள் பெரும்பான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தமிழர்களிலும்(29.7%) பார்க்க சிங்களவர்களின் எண்ணிக்கை (31.7%) உயர்வாக ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1871ல் திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 3% சதவீதமாக மட்டுமே இருந்த சிங்களவர் தொகை, 1981ல் 33.4% சதவீதமாக அதிகரித்த அதே காலப்பகுதியில் மொத்த சனத்தொகையில் 66.1% சதவீதமாக இருந்த தமிழ் மக்களது வீதாசாரம் 36.4% சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
நேரடியாகவும் மறைமுகமாகவும் இம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்கள மயமாக்கல் குடியேற்றங்களின் விளைவாகவே இம் மாவட்டத்தின் இனவிகிதாசாரம் இவ்வகையில் மாற்றம் பெற்றது. இவையெல்லாம் 1950 களில் இருந்து விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரிலும், 1970 களில் இருந்து நகர அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரிலுமே அரங்கேற்றப்பட்டன.
ஆயுதப் போராட்டம் தீவிரமாக இடம் பெற்ற காலப்பகுதியில் சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியாது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்களக் குடியேற்ற நடவடிக்கைகளும், நிலப்பறிப்புக்களும், சிங்கள முதலீட்டாளர்களுக்கு காணிகள் வழங்குவதும் அபிவிருத்தி என்ற போர்வையில் முழுவீச்சில் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இராணுவ நடவடிக்கை மூலம் சிங்கள இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசம் சிங்களவர்களுக்கே சொந்தம் என்ற ஆதிக்க மனோநிலையுடன் சிங்கள மயமாக்கலை அரச இயந்திரம் மேற்கொண்டுவருகின்றது.
இன்று இச் செயற்பாடுகள் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக இருப்பதால் உடனடி சிங்கள குடியேற்றங்கள் சாத்தியமில்லை என்பதால் பொருளாதார ரீதியாக சிங்கள மயமாக்கும் முயற்சிகள் தீவிரம் பெறுகின்றது. இத்தகைய சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட சிங்கள மயப்படுத்தல் திட்டங்களை நியாயப்படுத்த சில ‘தமிழ்த் தலைவர்கள்’ முனைகின்றனர்.
யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி என்ற போர்வையில் அரச தேவைகளுக்காகவும் அபிவிருத்திப் பணிகளுக்காகவுமென வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள காணிகளை சிங்கள முதலீட்டாளர்கவர்களுக்கு அரசு தாரைவார்த்துக் கொடுக்கின்றது. உதாரணமாக வடமாகாண ஆளுனரின் கட்டளையின் பிரகாரம் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயப் புனிதப் பகுதியில் உணவு விடுதிக்கான மாடிக்கட்டம் ஒன்றினை அமைப்பதற்கான காணி சிங்களவர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காலத்தில் அவர்களது பயன்பாட்டில் இருந்ததாக கூறித் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வீடுகள், காணிகள், விவசாய நிலங்கள் இராணுவத்தினரால் பலாத்காரமாக கையகப்படுத்தப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்கள், சிங்கள இராணுவக் குடியிருப்புக்கள் என்ற போர்வையில் தமிழர்களுடய வாழ்விடங்கள் தொடர்ந்தும் அரசினால் பறிக்கப்பட்டு வருகின்றது.
உதாரணமாக முறுகண்டி, கொக்காவில், அக்கராயன் போன்ற பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்துவதனூடாக இலட்சக்கணக்கான சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் இலங்கை அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்ட பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி சிங்கள மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2009 மே மாதத்திற்குப் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பல இந்து ஆலயங்கள் தொடர்ந்தும் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
வன்னியில் மீள் குடியமர்ந்த மக்களுக்கு இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்ந்தபடியே உள்ளதுடன், அடிப்படை வருமானம் ஏதுமற்றவர்களாக அவல வாழ்வு வாழ்கின்றனர். மீள்குடியமர்ந்தவர்கள் தமது வாழ்ககையை அந்த மண்ணில் தொடர்ந்து தக்கவைக்க தேவையான வகையில் குடியிருப்பு வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து வசதிகள், பாடசாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அத்துடன் வெளிமாவட்டத்திலிருந்து கடமைக்குவரும் ஆசிரியர்களுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் சீரான போக்குவரத்து ஒழுங்குகள், தங்குமிட வசதிகள் இல்லை.
ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக சகல பகுதிகளுக்கும் சென்றுவர முடியாத நிலை காணப்படுகின்றது. மக்களின் மீள்குடியமர்வு தொடர்பான விடயங்களில் இராணுவத்தினரின் அதிகரித்த தலையீடு காணப்படுவதுடன் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாமல் கடுமையான இராணுவ நிர்வாகம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளிடமிருந்து கோடிக்கணக்கான உதவிகளை பெற்றுக் கொண்டுள்ளபோதும் மனிதர்கள் வாழமுடியாத மோசமான வாழ் நிலையை வன்னியில் மீள்குடியமர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அரசு மக்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள மக்கள் வாழ்விடங்களிலும், விவசாய நிலங்களிலும், பொது இடங்களிலும் இராணுவ முகாம்களை அமைத்து அதிகளவான இராணுவத்தினரை நிலைகொள்ள வைத்துள்ளது.
இச் செயற்பாடுகள் மூலம் அவர்களை மீண்டும் மறைமுகமாக தாமாகவே வெளியேற வைப்பதும் அவ்வாறு மீள் குடியேறாதவாறு தமிழர்களைத் தடுத்து அவர்களது வாழ்விடங்களில் சிங்களக் குடியிருப்புக்களையும், சிங்கள மயமாக்கும் பொருளாதார வலயங்களையும் உருவாக்குவதுமே அரசின் உள்நோக்கமாகும். இந் நோக்கங்களை மூடி மறைத்து, சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி நிதி உதவி பெறுவதற்காகவே அரச அமைச்சர்களும், அதிகாரிகளும் மாறி மாறி வன்னிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்த ஆபத்தான நிலையை எமது மக்கள் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் நிலப்பறிப்பையும், சிங்கள மயமாக்கலையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவையாக உள்ளது. இந்த ஆதரவை திரட்டுவதற்கு தாயகத்திலுள்ள மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகளும் விழிப்புணர்வுடன் ஒற்றுமையாகச் செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி
**********************************
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிங்கள மயமாக்கலை தடுத்துநிறுத்த முன்வருமாறு தமிழ் சமூகத்திற்கு அழைப்பு