Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானிய போராளிகள் சிலர் இலங்கையை பயன்படுத்தி, இந்தியாவிற்குள் ஊடுறுவ முற்படுவதாக, இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஒப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி பெட்டகம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.பாகிஸ்தான் போராளிகளின் இந்த செயற்பாடு இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அந்த பெட்டகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் லஸ்கர் ஈ தாய்பா மற்றும் லஸ்கர் ஈ தாலிபான் போன்ற அமைப்புகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் கைக்கோர்த்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்தியாவில் உள்ள இலங்கையை பின்புலமாக கொண்டவர்கள் தொடர்பில் அவதான இருக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம், இந்திய புலனாய்வு அமைப்புஒன்று கோரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான தகவல் எவையும் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என்று, இந்த காணொயில் கருத்து வெளியிடும், மத்திய உள்துறை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கையினூடாக ஊடுருவ பாகிதாஸ்னிய போராளிகள் முயற்சியாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com