நாடு கடந்த தமிழீழ அரசாங்கச் செயலகம் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை பேரினவாத அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன அழிப்பு வன்முறைகள், படுகொலைகள், கடத்தல், காணாமற் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான கைதுகள், என்று அடிப்படை மனித உரிமை மீறல்கள், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் மீதும், வெள்ளைக் கொடியுடன் சென்ற போராளிகள் மீதும், இலங்கை இனவாத அரசு மானுடத்திற்கு எதிரான வகையில் கடும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளது.
இந்த போர்க்குற்றங்களின் மேல் இலங்கை அரசிற்கெதிராக சர்வதேச மட்டத்தில் சுயாதீன விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்று பல மனித நேய அமைப்புக்களும், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார், தற்போதய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜக்கிய நாடுகள் சபையின், நீதிக்கு புறம்பான, படுகொலைகள் தொடர்பான விசாரணையாளர் பிலிப் அல்ஸ்ரன், மனித நேய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் போன்றோரும் வலியுறுத்தியிருந்தார்கள். இந்த வழியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், இலங்கை அரசின் மீதான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளதுடன், அதற்கான செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சர்வதேச சட்டரீதியிலான நடவடிக்கைகள் பற்றி அவை ஆராய்ந்து வருகினறன. அண்மையில் ஜக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் திரு பான் கீ மூன் அவர்களினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினரை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன், சுயாதீன விசாரணைக்கு உதவும் வகையில் ஆதாரங்களையும், நேரடி சாட்சிகளையும் வழங்க முடியும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.
மாறிவரும் சர்வதேசக் நிலைப்பாட்டினால், சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசு, புலம் பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையையும், தாயகம் நோக்கிய அவர்களின் நடவடிக்கைகளை சிதைக்கவும் அத்தனை வளங்களையும் பயன்படுத்தி வருகின்றது. இந்த நேரத்தில் பேரவலங்களில் அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்களின் விடிவு நோக்கி புலம்பெயர் நாடுகளில் சர்வதேச ரீதியில் எடுக்கப்படும் நீதியான செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தினை எமது மக்களின் விடுதலை நோக்கி நகர வைக்கும் சாத்தியப் பாட்டினை உருவாக்கும்.
அந்த வகையில், ஈழத் தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரவலங்களை, உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும், அது பற்றிய உயர் விழிப்புணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும்,
இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்க்கள் மீது மானுடத்த்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்த்திரமான சரவதேச விசாரணை.
சிறை வைக்கப்ப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள் போரினால் இடம்பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்க்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.
இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்க்கணித்த்தல்.
என்கிற மூன்று முக்கிய தீர்மானங்களை முன்வைத்து திரு. சிவந்தன் அவர்கள் இலண்டன் மாநகரிலிருந்து ஜெனீவா வரையிலான 1000 மைல்கள் தூரத்தினைக் கொண்ட நீதீக்கான நடை என்கிற கடும் நடைப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார்.
சிவந்தனின் நடைப்பயண ஆரம்ப நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு தனிகாசலம் தயாபரன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வழியனுப்பி வைத்தார். தற்சமயம் பிரானஸ் நாட்டின் ஊடான நடைப்பயணத்தில் எமது பிரான்ஸ் பிரதிநிதிகளில் ஒருவரான திரு மகிந்தன்
சிவசுப்பிரமணியம் அவர்களும் இணைந்து செல்கின்றார். திரு சிவந்தன் அவர்கள் ஜெனீவாவை சென்றடையும் போது சுவிஸ் பிரதிநிதிகளும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
எமது மக்களின் விடுதலைக்கான அவசியத்தை தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகள் சர்வதேசத்திற்கு உணர்த்தி நிற்கும் திரு சிவந்தன் அவர்களின் இந்த மனித நேய முயற்சிக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமது தார்மீக ஆதரவை வழங்க வேண்டும், என்று கேட்டுக் கொள்வதுடன் அதன் வெற்றிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நீதிகேட்டு நடக்கும் சிவந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்