Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கே.பி.யிடம் கப்பல்களும் பணமும் இருக்கும்வரை அவரது உயிருக்கு அரசால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க நேற்றுக் கூறினார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத நிலையில் அரசுடன் இணைந்துள்ள கட்சிகள் உள்ளன.

ஜாதிக ஹெல உறுமய கட்சி அரசு செய்யும் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிறது.

கே.பி. அரசின் பிடியில் இருக்கின்றார். அவரைத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவும் பெறப்படவில்லை. அவ்வாறாயின் அவர் எந்தச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்று அரசு நாட்டு மக்களுக்குக் கூறவேண்டும்.

இந்த விடயம் தொடர்பாக நான் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியபோதும் அரசால் எதுவித பதிலும் வழங்கப்படவில்லை.

இருப்பினும், கே.பியிடம் கப்பல்களும், நிதியும் இருக்கும்வரை அவரது உயிருக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது என்பது எமக்குத் தெரியும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கே.பியிடம் பணம் உள்ளவரை அவருக்கு உயிர் ஆபத்து இல்லை: அநுரகுமார திஸாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com