Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புகலிடம் கோரும் 492 இலங்கைத் தமிழர்களையும் தடுத்து வைத்து விசாரணை நடத்திவரும் கனடிய அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு குடியேற்றவாசியினதும் அடையாள ஆவணங்கள் ஆய்வுக்காக வன்கூவரிலுள்ள கனடாவின் எல்லைச் சேவை முகவர் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்படவேண்டியுள்ளது.

அதேசமயம் குடியேற்றவாசிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரணை நடத்தவேண்டியுள்ளது. அவர்களின் ஆவணங்களும் அவர்கள் கூறும் விடயங்களும் பொருத்தமானவையாக உள்ளனவா என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

சில குடியேற்றவாசிகள் ஒருபகுதி ஆவணங்களையே வைத்திருக்கின்றனர். சிலர் புகைப்படப்பிரதிகளை மட்டும் வைத்திருக்கின்றனர்.

அவர்கள் இலங்கையிலுள்ள தமது உறவினர்களிடமிருந்தோ அல்லது இதர இடங்களிலிருந்தோ ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

குடியேற்றவாசிகள் சிலர் தம்முடன் ஆவணங்களை எடுத்துவந்துள்ள நிலையில் சிலர் கப்பலில் அவற்றை விட்டுவிட்டு வந்துள்ளனர். அதனால் அதிகாரிகள் அவற்றைப் பெற்று சம்பந்தப்பட்ட நபருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை குடியேற்றவாசிப் பெண் ஒருவரிடம் விசாரணை நடத்திய போது அப்பெண் எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் கனடாவை வந்தடைந்ததாகக் கனடாவின் எல்லைச் சேவைகள் முகவர் நிலையத்தின் சட்டத்துறை பிரதிநிதியான அசீம் லால்ஜி குடிவரவு அகதிகள் சபையின் விசாரணையாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால் கப்பலிலிருந்து பெற்றுக்கொண்ட தனது அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழை அப்பெண் கையளித்ததாகக் குடியேற்றவாசிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களில் ஒருவரான எரிக் புட்ங்கி கூறியுள்ளார்.

மற்றொரு அறையில் வேறொரு பெண் குடியேற்றவாசியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அப்பெண்ணிடமிருந்த ஆவணங்களை பரிசீலிப்பது கடினமானதாக இருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நடவடிக்கைகளுக்காக 10 தமிழ் உரைபெயர்ப்பாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

விசாரணை நடவடிக்கைகளில் பெண்கள், சிறுவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சன்.சீ அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதில் நெருக்கடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com