Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தேடும் போது தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி பிரதான பிரச்சினையை திசைதிருப்ப ஆளும் கட்சி தொடர்ந்தும் முயற்சித்துவருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்

தமிழ் மக்களிடையே உள்ள சில நபர்களின் கொள்கைகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. உலகில் எந்த இடத்திலும் ஒரு இனத்தில் விசேடமான பிளவுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. அன்று ஜேர்மனியின் அடோல் ஹிட்லர்தனது நாட்டு மக்களிடையே இன ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தினார்
இன மக்கள் வாழ்கின்ற பிரதேசம் அவர்களின் சாதி, தொழில், கல்வித் தகமை, பின்பற்றும் மதம், பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் அவர; அந்தப் பிளவை ஏற்படுத்தவில்லை. உலகில் வாழும் யுதர்களைக் கொல்வதற்கு அவர் இந்த நடைமுறையே கடைபிடித்துவந்தார்

இவ்வாறான பாகுபாடுகள் காரணமாகவே யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழர்கள் என்பதால் எமது சகோதர மக்கள் பல்வேறு துயரங்களை எதிர்நோக்கினர்

அண்மைக் காலத்தில் மக்களிடையே காணப்படும் பிளவுகளைச் சுட்டிக்காட்ட சிறந்த சந்தர்ப்பம் என்பதால் இதனை உதாரணமாக எடுத்துக்கூற வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டின் அரசியலானது அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டதே தவிர மக்களின் நலன்கருதியாக அமையவில்லை.

30 வருட யுத்தத்தில் மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களுக்குக் கட்டியெழுப்ப முடியாத வகையில் அழிவடைந்துள்ளது. வீடு, கல்வி, விவசாயம் என சகல வாழ்வாதார வழிகள் இதில் முதன்மையாகும். யுத்தம் காரணமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் உருவாகியுள்ளனர;.

பிள்ளைகள் உரிய போசாக்கு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என்பன கிடைக்காத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் தமிழ் மக்கள் முகாமிற்கு முகாம் மாற்றப்பட்டு பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழர்களிடையே பிளவுகளை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com