சுவிஸ் மண்ணிலிருந்து நடைப்பயணம் மேற்கொள்ளும் இளையோர்களும், பிரான்ஸ் தேசத்திலிருந்து நடந்து செல்லும் இளையோர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கு Geneva Perly (எல்லை) யில் ஓர் முனையில் ஒன்று சேர்கின்றனர்.தொடர்ந்து ஐ.நா சபையை நோக்கிக் கால் நடையாகச் சென்று தமது கோரிக்கைமனுவை கையளிக்கவிருப்பதுடன் சுவிஸ் ஈழத்தமிழரவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்படவிருக்கும் தேசிய இன எழுச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
மிகப்பெரும் சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் இளையோர்களால் முன்னெடுக்கப்படும் இக் கவனயீர்ப்பானது உலகநாடுகளால் உற்றுநோக்கப்படுவதாகவும் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை இடித்துரைப்பகவும் அமையவிருக்கிறது.
நேற்றைய தினம் 49km தூரத்தை; கடந்த இளையோர்கள் தற்பொழுது Rolle எனும் நகரிலிருந்து Geneva Perly (எல்லை) வரை 41 km தூரத்தைக் கடந்து சென்று நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு France லிருந்து வருகை தரும் சிவந்தன் உட்பட்ட இளைஞர்களுடன் இணைந்து ஐநா வரை நோக்கி நடக்கவுள்ளனர். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் இவர்களது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு சுவிஸ் ஈழத்தமிழரவையும் தமிழ் இளையோர் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன் குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எம்முடன் இணைய விரும்பினால் எனும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொள்ளவும்.
· சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
· தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
· மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக முன்வைத்து ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி கடந்த ஜூலை மாதம் 23ஆம் நாள் முதல் லண்டனில் இருந்து பரிஸ் நகரம் ஊடாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் தொடர்ந்து விநியோகம் செய்தவாறே இளையோர்கள் செல்கின்றனர்.
இறுதி நிகழ்வுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு வருபவர்கள் உங்கள் நகரங்களில் உள்ள ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகொண்டு உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். ஒட்டுமொத்த தமிழ்மக்களின் அவாவையும் தாங்கி சிவந்தன் முன்னெடுக்கும் இலட்சியப்பயணத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களும் தமது தார்மீக ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
079 308 06 69, 079 301 59 95, 079 928 25 00





மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to எல்லையை நெருங்கும் இளையோரின் நடைப்பயணம்! வரவேற்கக் காத்திருக்கும் ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம்