விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்திருந்தனர்.
இலங்கையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அப்பாவி தமிழர்களை சிங்கள இராணுவம் சுட்டுக்கொல்வதை கண்டித்து இந்த திரைப்பட விழாவில் இந்திய நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளக் கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனையும் மீறி இந்தி நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் ஆகியோரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்துக்கு நடிகர் விவேக் ஓபராய், நடிகை அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து கொண்டு வந்திருந்தனர்.
இதில் நிர்வாகிகள் பரமேஸ்வரன், முருகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் அண்ணாத்துரை பேசும் போது, இலங்கையில் இந்து கோவில்களை இடித்து விட்டு புத்தமத கோவில்களை அதிபர் ராஜபக்சே கட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to அசின், விவேக் ஓபராய் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்