ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (08.09.2010) 12வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று (07.09.2010) காலை Bantzenheim எனும் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து Balgau ஊடாக 26km நடந்து Neuf-Brisach எனும் இடத்தை சென்றடைந்தனர்.
சீரற்ற காலநிலையிலும் மனவுறுதியுடன் தமது சீரிய நோக்கத்தை மனதில் கொண்டு, அடாது மழை பெய்தாலும் விடாது நடப்போம் என்று தமது மனிதநேய நடைபயணத்தை மேற்கொண்டு இதுவரை 307 km வரையான தூரத்தை அடைந்துள்ளனர்.
பெல்ஜியம், புறுசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி செல்லும் வழியில் இன்று (08.09.2010) பிற்பகல் 14:00 மணியளவில் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மனிதநேய கோரிக்கைகள் கொண்ட மனு கையளிக்கப்படவுள்ளது.
இவர்களின் நடைபயணத்தை ஆதரித்து உலகின் பல பாகங்களிலுமிருந்து குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஈழ உணர்வாளர்கள் வாழ்த்துச்செய்திகளை தெரிவித்தவண்ணமுள்ளனர். இது தமக்கு மேலும் உற்சாகமளிப்பதாக தெரிவித்தனர். அத்துடன் தாயக எழுச்சிப் பாடல்களை பாடியவாறும், தழிழ் உயிர் எழுத்துக்களை உச்சரித்தவாறும் உணர்வோடு தமது நடைபயணத்தை தொடருகின்றனர்.
• இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
• எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
• மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து ஓகஸ்ட் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனிவாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
செல்லும் வழியெங்கும் சேர்ந்து நடவுங்கள். 0033601094027 இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டும், www.walk-for-justice.org என்ற பிரத்தியேக இணையப்பக்கத்திலும் பாதை விபரங்களை உடனுக்குடன் அறிந்து பிரதேசவாரியாக ஆதரவளியுங்கள்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to 12வது நாளில் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிய மனிதநேய நடை பயணம் (படங்கள் இணைப்பு)