வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமான் ஒரு கூட்டத்தில் பேசினார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அவரை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர்.
"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக டைரக்டர் சீமான் மீது அடக்குமுறை ஏவப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்துள்ளனர். டைரக்டர் சீமான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை" என்று வைகோ கூறினார்.
தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன், "டைரக்டர் சீமானை விடுதலை செய்யவேண்டும்" என்று கூறினார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறையில் இருக்கும் சீமானை வைகோ, நெடுமாறன் சந்தித்தனர்