வன்னி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் குறைபாடுகளை உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடபகுதியில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் கீழ்வரும் பிரச்சினைகளைத் தங்களது கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
1. மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு வசதிகள் தொடர்பாக
தற்காலிக கூடாரங்களில் வசிக்கும் மீள்குடியேறிய மக்களின் குடியிருப்புக்களை மழை காலம் தொடங்குவதற்கு முன்பாக நிரந்தர வீடுகளை அமைத்து அல்லது கொட்டைகைகளைப் பலமாக்கிக் கட்டித்தர ஆவன செய்யவும்.
2. நன்னீர் மீன்பிடிப்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
மீள்குடியேற்றம் இடம்பெறும் கிராமத்தின் குளங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகளைப் பெற்று மீன் பிடித்து வருவதால் மீள்குடியேறிய மக்களின் அன்றாட ஜீவனோபாயம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் ஏ-9 வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள மாளிகை, சேமமடு முதலான குளங்களில் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுவோர் குளத்தில் வளர்ந்துவரும் சிறிய மற்றும் பெரிய மீன்களை மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி பெருமளவில் அள்ளிச் செல்கின்றனர். அத்துடன் அங்கு மீள்குடியோர் சிறியளவில் தமது உணவுத்தேவைகளுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. இங்கு கடமையில் உள்ள பாதுகாப்புப் பிரிவினர் மீள்குடியேறியோர் மீது மேற்கொள்ளும் இத்தகைய தடையை நீக்கவும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஏதுவான நடவடிக்கையினை மேற்கொள்ளவும்.
3. வானகங்களுக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப்பத்திர நடைமுறையை தளர்த்துங்கள்
அத்தியாவசியப் பண்டங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குக்கூட விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பமைச்சு அனுமதிப்பத்திர முறையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியோர் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அரிசி, சோடா மற்றும் சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உட்பட தொலைத்தொடர்பு சேவை மற்றும் அரச, அரசார்பற்ற தனியார் வாகனங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உள்நுழைவு அனுமதிப் பத்திரங்களைப் பாதுகாப்பமைச்சில் பெறவேண்டிய நடைமுறையினை இரத்துச் செய்து பாதிக்கப்பட்ட மீள்குடியேறியோர் மற்றும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்த்திடுக.
4. துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரம் (Shot Gun License) வழங்குதல்
மேட்டுநில காணிகள் மற்றும் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் மீள்குடியோர் யானை, பன்றி போன்ற காட்டு மிருகங்களால் பயிர்ச்செய்கை அழிக்கப்பட்டு உயிர் ஆபத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
இவர்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே 1983களின் முன்னர் வழங்கிய துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்கள் மீளப் பெறப்பட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும்.
5. பாதைகள் துப்புரவாக்குதல் மற்றும் செப்பனிடல்
மீள்குடியேற்றக் கிராமங்களிற்குச் செல்லும் பாதைகளில் மண்டியுள்ள பற்றைக்காடுகளை அழித்து இப்பாதைகளை செப்பனிட டோசர் போன்ற கனரக வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுத்துதவவும்.
வன்னி மாவட்டக் கச்சேரிகளில் இவ்வாறான பணிகளுக்குப் போதுமான நிதிவளம் இன்மையால் அவற்றினை வழங்க முன்னுரிமை வழங்கவும்.
மீள்குடியேறிய மக்கள் எதிர்கொள்ளும் மேற்குறிப்பிட்டுள்ள அத்தியாவசிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மீள்குடியேற்றப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்