Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கும்பகோணம் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 05-09-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கும்பகோணம் பெரிய கடை வீதியில் உள்ள சிவா இண்டர்நேஷனல் விடுதியில் அரசியல் பயிற்சிப் பட்டறை வகுப்பு நடைபெற்றது. இந்த அரசியல் பயிலரங்கில் தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். காலை சரியாக 9.30 மணிக்கு நிகழ்வுகள் துவங்கின. தமிழனத்தினை காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக அனைவரும் 1 நிமிடம் மவுனம் காத்தனர். பிறகு வீர வணக்க முழக்கங்களையும், உறுதிமொழி வாசகங்களையும் கும்பகோணம் நகரத்தலைவர் ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன் வாசிக்க அனைவரும் பின்பற்றினர்.

கும்பகோணம் நகரச்செயலாளர் நாதன் என்கிற அரசு வரவேற்புரை நிகழ்த்த, முதல் அமர்வாகநாம் தமிழராக எழுவோம்என்ற தலைப்பில் பேராசிரியர் இளமுருகனார் வகுப்பு நடத்தினார். தமிழரின் பண்டைய வரலாற்றில் இருந்து நிகழ்காலம் வரையிலும் படிப்படியாக தமிழரின் வரலாற்றினை அவர் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தி உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. அடுத்த அமர்வில்தமிழுணர்வும்- திரைப்பட ரசிகத் தன்மையும்என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் .மணி வகுப்பு நடத்தினர். பண்டைய தமிழ் சினிமாவுக்கான ரசிகத் தன்மையிலிருந்து நிகழ்கால ரசிகத்தன்மை வரை அவர் சுவைப்பட விவரித்தார்.

மேலும் சினிமா ரசிகத் தன்மையின் விபரீதங்களையும், ரசிகர் மன்றங்களில் இருந்து தமிழர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட வேண்டும் என்பதனையும் அவர் விளக்கி உரை நிகழ்த்தினார். காலை 11.30 மணிக்கு தேநீர் இடைவெளிக்குப் பிறகு உலக விருதுகள் பல பெற்ற , மத்திய மாநில அரசுகளின் உச்ச விருதுகளைப் பெற்ற கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் பிரமுகரும், இயக்குனருமான .முரளி மனோகர் இயக்கியகர்ணமோட்சம்குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. ஒரு கூத்துக் கலைஞனின் ஒரு சில மணி நேர வாழ்வினை நேர்த்தியாக பதிவு செய்திருந்த அப்படம் பார்வையாளர்களால் பலத்த வரவேற்பினைப் பெற்றது. மூன்றாம் அமர்வில்ஏன் சீமான் ?” என்ற தலைப்பில் ஆசிரியர் வீரத்திருக்குமரன் வகுப்பெடுத்தார். நகைச்சுவை பொங்க தமிழக அரசியல் போக்குகளை அவர் விவரித்த போக்கு அனைவரையும் கவர்ந்தது.

காலத்தின் கட்டாயமாக தலைவர் சீமான் தோன்றியுள்ளார் என அவர் விவரித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. அடுத்த அமர்வில்நாம் தமிழரின் அரசியல் புரட்சிஎன்ற தலைப்பில் அம்மா புதுவை போர்க்கொடி அவர்கள் வகுப்பெடுத்தார்கள். தன்னுடைய போராட்ட வாழ்க்கையையும்,புரட்சிகர செயல்பாடுகளையும் ,புரட்சிகர பாதையிலிருந்து வெகு சன இயக்கமான நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை பொருத்தி வைத்து அவர் விவரித்தது அனைவருக்கும் சிலிர்ப்பினை தந்தது. மதியம் அனைவருக்கும் தமிழர் உணவான சர்க்கரைப் பொங்கல், புளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டன. மதிய உணவிற்கு பிறகு தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் உணர்ச்சி நிரம்பிய உரை வீச்சுகளில் சில காட்சிகள் திரையிட்டு காட்டப்பட்டன.

கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் ஊடகப் பிரிவு தயாரித்தநாம் தமிழனாய் முழங்குஎன்ற குறும் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. 5 ஆம் அமர்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் தென்றல் சந்திரசேகர் வகுப்பெடுத்தார். திராவிட அரசியல் கட்சிகளின் சமூக விரோத போக்குகளை விவரித்த அவர், அந்த கட்சிகளின் முரண்கள் நிறைந்த செயல்பாடுகளை புள்ளி விபரங்களோடு பேசிய அவரது பேச்சு சிறப்பாக அமைந்தது. அடுத்ததாக தமிழ் தேசிய ஆய்வறிஞர் . பேராசிரியர் மருதமுத்துதமிழ்த் தேசிய சிந்தனைகள்என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். தேசியத் தலைவர் பிரபாகரன் வெறும் பெயரல்ல; அது ஒரு உலகாளவிய தத்துவம் என அவர் விவரித்துப் பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. இறுதியாக கட்சி கட்டமைப்பு பணிகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் நல்லதுரை, மணி செந்தில் ஆகியோர் ஆய்வு செய்து பேசினர். உறுப்பினர் படிவங்கள் ,மற்றும் கிளை கட்டமைப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இறுதியாக தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதா முத்துகிருஷ்ணன் நன்றி நவின்றார் . தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வீரக்குமரன் என்ற வினோபா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

இறுதியாகஜனவரி -29 “ –என்ற மாவீரன் முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. உணர்ச்சிக் கொந்தளிப்பு நிரப்பிய அப்படத்தினை பார்த்த பார்வையாளர்கள் கண் கலங்கி நெகிழ்ந்தது மிக உருக்கமாக இருந்தது.

கிட்டத்தட்ட 11 மணி நேரம் நடைப் பெற்ற இந்த அரசியல் பயிற்சி பட்டறை வகுப்பில் கலந்துக் கொள்ள வந்தவர்களுக்கு அடையாள அட்டை ,குறிப்பேடு, எழுதுகோல் , தமிழ்த் தேசிய நூல்கள் ஆகியவை வழங்கப்பட்டன. அனைவரும் மிக கட்டுப்பாட்டோடும் , ஒழுங்கமைவோடும் கலந்துக் கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து செல்வம், அந்தோணி தலைமையிலும், திருவாரூர் மாவட்டத்திலிருந்து அய்யா தென்றல் சந்திரசேகர் தலைமையிலும் வந்திருந்து நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா, நகரத்தலைவர் ரகமதுல்லா, நகரசெயலாளர் நாதன், இளைஞரணி அமைப்பாளர் வீரப்பன் தலைமையிலான இளைஞரணியினர் ஆகியோர் செய்திருந்தனர்.




மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கும்பகோணம் நாம் தமிழர் நடத்திய அரசியல் பயிற்சிப் பட்டறை (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com