சுவிஸ் ஜெனிவாவிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலிலிருந்து மூன்று தமிழீழ உணர்வாளர்கள் தன்னெழுச்சியாக முன்வந்து புறுசலிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி மனிதநேய நடைப்பயணமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜீலை 23 ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து நடைப்பயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி முருகதாசன் திடலில் தனது பயணத்தின் கோலை விட்டுச்சென்றார்.
அதன் தொடர்ச்சியாக ஒரு வார இடைவெளியின் பின் அடுத்தகட்டபயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. முருகதாசன் உட்பட 18 தியாகிகளின் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு நடைபயணம் ஆரம்பமானது.
எதிர்வரும் 26.09.2010 அன்று தியாகதீபம் திலீபன் நினைவு நாளன்று இம்மூன்று ஈழஉணர்வாளர்களும் புறுசலைச் சென்றடைவர். இவர்கள் சென்றடைவதை முன்னிட்டு எதிர்வரும் 27.09.2010 புறுசலில்அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முன்பாக மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும் மனுக்கையளிப்பும் இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவேண்டும்.அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவேண்டும். எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும்.
அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ்அரசியல் கைதிகள் விடுவிக்கப்படு-மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சீறிலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திரு.ஜெகன்(62)அவுஸ்திரேலியா, திருமதி.தேவகிகுமார்(36)சுவிஸ், திரு.வினோத்(48)பிரான்ஸ், ஆகிய உணர்வாளர்களே இப்பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இணைந்து நடந்து தமது ஆதரவை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
12.09.2010 ஞாயிறு அன்று Saarland மாநிலஎல்லை நகரங்களான Saarbrücken,Völklingen,Saarlious,Dillingen,Merzig, Mettlach,Orschholz,Nennig ஊடாகவும் நடைப்பயணம் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்!
யேர்மனியில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் நடைபயணம் மேற்க்கொள்ளும் உணர்வாளர்களை வந்து சந்தித்து அவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சமஉரிமைக்கான தமிழர் மையம் – யேர்மனி
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ஜெனீவாவிலிருந்து மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடைப்பயணம்