தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெற்ற பாரளுமன்ற உறுப்பினரான சிங்களச் சகோதரர் திரு பொடியப்பு பியசேனா, அரசுக்கு சார்பாக வாக்களித்தையிட்டு சிலர் ஏக்கமுற்றுள்ளார்கள். அப்படி திகைப்படைந்தவர்களுக்கு இன்னும் அரசியலில் முதிர்ச்சி போதாதே என்றே நாம் கருதலாம்.
முதலாவதாக, இலங்கைதீவில் உள்ள தமிழ் கட்சிகளின் சரித்திரத்தை நாம் பார்ப்போமேயானால், ஓவ்வொரு தடவையும,; குறைந்தது ஒரு பாரளுமன்ற உறுப்பினர் ஏதோ ஒரு தமிழ் கட்சிகளிலிந்து சிங்கள அரசிற்கு ஆதரவாக சென்றுள்ளதை நாம் காணலாம். அண்மை காலங்களில் ஆயுதப் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்ணனி தலைவர்களே அரசுக்கு ஆதரவாக இருக்கும் வேளையில், பியசேனவை அவராது தேசியத்தை காப்பாற்றும் ராஜபக்சாக்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு நாம் எதிர்பார்ப்பது மிகவும் குழந்தைபிள்ளை தனமாகும்.
தமிழர்களாகிய எம்மில் சிருக்கோ பலருக்கோ தமிழ் தேசியத்தில் அக்கறையில்லாது இருக்கலாம், ஆனால் பியசேன அவரது சிங்கள தேசியத்தை எதிர்த்து எம்முடன் நிற்க வேண்டுமென நாம் எதிர்பார்பது ஜனநாயக பண்படுகளுக்கு புறப்பானது.
உண்மையில் நாம் திகைப்படைந்து முன்பே சிந்தித்திருக்க வேண்டிய விடயம் என்னவெனில், இலங்கை சரித்திரத்திலேயே ஓர் சிங்களவர், முதல் முறையாக, விசேடமாக ஓர் தமிழ் கட்சியின் சர்பாக தமிழ் பிரதேசத்தில் போட்டியிட முன்வந்துள்ளமை! இவருடைய பின்ணணிகளை காலம் தாழ்த்தினாலும் இப்பொழுது தன்னும் தமிழர் தேசிய கூட்டமைப்பு புரட்டி பார்க்க கடமைப்பட்டுள்ளது. அப்பொழுது தான், எதிர்காலத்தை மனதில் கொண்ட பௌத்த சிங்களவாதிகள் சிலரின் துணையுடன், இவரை மிகவும் திறம்பட பயிற்சி அழித்து மேடையேற்றினார்கள் என்பது புலப்படும்.
மிக வேடிக்கை என்னவெனில், தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அம்பாறை தொகுதியில் பாரளுமன்ற உறுப்பினராக ஓர் சிங்களவர் (திரு பியசேனா) வெற்றி பெற்றதை சிறிலங்கா அரசு சர்வதேச ரீதியாக உதராணம் காட்டி பிரச்சாரம் செய்ததை, தமிழர் தேசிய கூட்டமைப்பினர் காலம் கடந்து தன்னும் அறியது இருப்பது மிக கவலைக்குரிய விடயம். இவை யாவும் “யானை தன் கையால் தனக்கு மண் அள்ளி கொட்டியதற்கு” சமமானாது.
இறுதியாக ஓர் வேண்டுகோள்! தமிழர் தேசிய கூட்டமைப்பில் மிகுதியாவுள்ள உள்ள பாரளுமன்ற உறுப்பினர்கள் யாரும், எதிர்காலத்தில் அரசிடம் செல்லாது பாதுகாப்பதையே, தமிழர் தேசிய கூட்டமைப்பினர் தமது முக்கிய கடமையாக தற்பொழுது கொள்ள வேண்டிய காலம் இது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பாரளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன என்ன தவறு செய்தார்? - ச. வி. கிருபாகரன்