Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரணடைந்து படையினரால் தடுக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வரையில் பத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள் படையினரின் புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அரசாங்கத்தினால் மன்னிப்பளித்து விடுவிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளோரில் ஆண், பெண் முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டதாகக் கருதப்படுவோரும் அடங்குகின்றனர். நெடுந்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் இருந்து இந்தக் கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதில் சிரமங்களைத் தாம் எதிர்நோக்கியுள்ளதாக கைது செய்யப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கைது செய்து கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாகவும் கைது செய்யப்பட்டோரின் நிலையைப் பற்றியும் யாரிடம் முறைப்பாடு தெரிவிப்பது என்று தமக்குத் தெரியவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரின் உடல் உறப்புக்களை இழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் என்போரும் உள்ளனர்.

இவ்வாற மேற்கொள்ளப்படும் கைதுகளால் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் குடும்பத்தினரிடையே பதற்றமும் கவலையும் தோன்றியுள்ளன.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to விடுவிக்கப்பட்ட முன்நாள் போராளிகளை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com