Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனைத்து இராணுவத் தளங்கள், முகாம்களில் இருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் படங்கள், பெயர் என்பன அழிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் ேபாது குற்றவாளியாகக் காணப்பட்டு அவரது ஜெனரல் தரநிலைப் பட்டம் பறிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாக இருந்த போது ஆயுதக் கொள்வனவுகளில் முறைகேடுகள் செய்ததாக இரண்டாவது இராணுவ நீதிமன்றம் குற்றாளியாகக் கண்டு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனையை அறிவித்துள்ளது.

இந்தநிலையிலேயே சிறிலங்கா இராணுவப் படைப்பிரிவுகள், தளங்கள் , தலைமையகங்கள், முகாம்களில் இருந்த சரத் பொன்சேகாவின் படங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களுக்குள் அகற்றப்பட்டுள்ளன.

சில இடங்களில் நினைவுப் படிகங்களில் பொறிக்கப்பட்டிருந்த அவரது பெயரும் அழிக்கப்பட்டுள்ளது.

அம்பேபுஸ்ஸவில் இருந்த சிங்கப் படைப்பிரிவின் தலைமையகத்தில் சரத் பொன்சேகா மற்றும் அனோமா பொன்சேகா ஆகியோரின் பெருமளவு படங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும்படி பௌத்த பீடாதிபதிகளிடம் இருந்தோ அல்லது வேறு எவரிடம் இருந்தோ வேண்டுகோள்கள் அரசுக்கு விடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to படைத்தளங்களில் இருந்த பொன்சேகாவின் படங்கள் அழிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com